புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்
Remove ads

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம் ( இலத்தீன்: Pondicherien(sis) et Cuddaloren(sis) என்பது புதுச்சேரி அமலோற்பவ அன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் புதுவையில் ஆட்சிப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. 2011ஆம் ஆண்டில் இந்த உயர்மறைமாவட்டம் தனது 125வது ஆண்டை சிறப்பித்தது.

விரைவான உண்மைகள் புதுவை கடலூர் உயர்மறைமாவட்டம் Archidioecesis Pondicheriensis et Cuddalorensis, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

புதுச்சேரியில் கிறித்தவம் பரவிய வரலாறு

இன்று புதுச்சேரி-கடலூர் என்று வழங்கப்படுகின்ற உயர்மறைமாவட்டம் புதுச்சேரி மாவட்டத்தையும் காரைக்கால் மாவட்டத்தையும் உள்ளடக்குவதோடு, தமிழ்நாட்டின் பகுதிகளாகிய கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

2001 கணக்கெடுப்பின்படி, புதுச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,151,891 ஆக இருந்தது. அங்கு தமிழ் இனத்தவரும் பிரஞ்சு பின்னணி உடையோரும் உள்ளனர்.

சுமார் 1700இல் தென்னிந்தியப் பகுதிகளில் கிறித்தவத்தைப் பரப்புவதற்காக "கர்நாடக மறைத்தளம்" (Carnatic Mission) தொடங்கப்பட்டது. அது சோழமண்டலக் கடற்கரை மறைத்தளம், மலபார் மறைத்தளம் என்னும் பெயர்களாலும் அறியப்பட்டது.

கர்நாடக மறைத்தளம் உருவாவதற்கு முன், மதுரை மறைத்தளத்தைச் சார்ந்த் இயேசு சபையினர், குறிப்பாக புனித அருளானந்தர் செஞ்சி நாட்டுப் பகுதிகளில் 1660களுக்குப் பின் வந்து, சென்னைக்குத் தெற்கே பாலாறு பகுதி வரையிலும் கிறித்தவத்தைப் பரப்பினார்கள்.

வேறு பல துறவற சபையினரும் கடலூர், பரங்கிப்பேட்டை (Porto Novo) ஆகிய வணிகமையங்களில் குடியேறியிருந்த ஐரோப்பியருக்கு மறைப்பணி ஆற்றினர். பிரான்சைச் சார்ந்த கப்புச்சின் சபைத் துறவிகள் 1674இல் புதுச்சேரியில் வந்துசேர்ந்து மறைப்பணி செய்தனர். தாய்லாந்திலிருந்து வெளியேற்றப்பட்ட இயேசு சபைத் துறவிகள் புதுச்சேரியில் 1688இல் குடிபெயர்ந்து வந்து, அங்கு மறைப்பணி செய்வதில் ஈடுபட்டனர்.

ஆனால், 1693இல் டச்சுப் படை புதுச்சேரியைக் கைப்பற்றி, அங்கு மறைப்பணி ஆற்றிய அனைத்து கத்தோலிக்கத் துறவிகளையும் வெளியேற்றினர். அவர்கள் மீண்டும் 1699இல் தான் திரும்ப முடிந்தது. கப்புச்சின் சபையினர் புதுச்சேரியில் குடியேறியிருந்த ஐரோப்பியருக்கு மறைப்பணி புரிந்த அச்சமயத்தில், இயேசு சபையினர் கர்நாடக மறைத்தளம் வழியாக இந்திய மக்கள் நடுவே பணிபுரிந்தனர்.

கர்நாடக மறைத்தளத்தின் எல்லைகள் வருமாறு:

  • தெற்கிலும் மேற்கிலும் பெண்ணை ஆறு. அதற்கு அப்பால் மதுரை மறைத்தளம், மற்றும் மைசூர் மறைத்தளம் இருந்தன.
  • கிழக்கே வங்காள விரிகுடா
  • வடக்கே கர்னூல் மற்றும் கடற்கரை அருகே கிருஷ்ணா, கோதாவரி பகுதிகள்.

18ஆம் நூற்றாண்டில் இடையறாத நிகழ்ந்த போர்களின் காரணமாக புதுச்சேரி 1761இல் பெரிதும் பாதிக்கப்பட்டது. 1773இல் இயேசு சபை ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்டது. இதன் விளைவாக புதுச்சேரியில் கிறித்தவம் நலிந்தது.

முன்னால் இயேசு சபையினர் மறைப்பணி ஆற்றிய இடங்களில் பணியைத் தொடரும் வண்ணம் திருச்சபைத் தலைமை அதிகாரிகள் இசைவோடு பாரிசு வெளிநாட்டு மறைபரப்பு சபைத் துறவிகள் புதுச்சேரியில் பணி தொடங்கினர். அப்பகுதியின் மறைத்தலைவருக்கு ஓர் ஆயருக்கு உரிய அதிகாரம் இருந்தபோதிலும் அவருக்கு "சோழமண்டலக் கடற்கரை மறைத்தளத் தலைவர்" என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இயேசு சபை தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மதுரை, கோயம்பத்தூர் மற்றும் மைசூர் பகுதிகளையும் கண்காணிக்க வேண்டியிருந்தது.

ஆக, 1800களில் கர்நாடக மறைப்பணித் தளம் மிக விரிந்த ஒன்றாக இருந்தது. ஆனால் அங்கு மறைப்பணி ஆற்றியோரின் எண்ணிக்கையோ மிகக் குறைவு.

பின்னர் கர்நாடக மறைத்தளம் திருத்தி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 1832இல் சென்னை உயர்மறையாட்சித் தளமும், 1836இல் மதுரை மறையாட்சித் தளமும் 1845இல் விசாகப்பட்டினம், மைசூர், கோயம்பத்தூர் ஆகிய மறையாட்சித் தளங்களும் உருவாக்கப்பட்டன.

1836, செப்டம்பர் முதல் நாள் புதுச்சேரி சோழமண்டலக் கடற்கரை மறைப்பணித் தளத்தில் தனி உயர்மறையாட்சித் தளமாக உயர்த்தப்பட்டது. அதற்குத் தலைவராக போனாந் (Bonnand) என்பவர் நியமிக்கப்பட்டார். அது 1886, செப்டம்பர் முதல் நாள் ஓர் உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

இந்த உயர்மறைமாவட்டம் புதுச்சேரியை மட்டுமன்றி தமிழ்நாட்டுப் பகுதியான தென்னாற்காடு மாவட்டத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் 1953, ஆகத்து 7ஆம் நாள் "புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்" என்னும் பெயர் பெற்றது.

புதுச்சேரியில் பல புகழ்பெற்ற கத்தோலிக்க கோவில்கள் உள்ளன. அவற்றுள் சில:

Remove ads

ஆயர்களும் கர்தினால்களும்

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, ஆயர்களாகவும்[1], கர்தினாலாகவும் உயர்ந்தவர்களின் பட்டியல்:

  • ஆயர்கள்:
    • மேதகு. உபகாரசாமி பெர்னதெத், கோவை ஆயர் (1940)
    • மேதகு. ஜோசப் மாற்கு கோபு, புதுவை-கடலூர் துணை ஆயர் (1948), ஹைதராபாத் பேராயர் (1953)
    • மேதகு. ஜோசப் தும்மா, விஜயவாடா ஆயர் (1970)
    • மேதகு. மைக்கேல் துரைசாமி, சேலம் ஆயர் (1974)
    • மேதகு. மிகேல் அகுஸ்தீன், சென்னை-மயிலை துணை ஆயர் (1978), வேலூர் ஆயர் (1981), புதுவை கடலூர் பேராயர் (1992)
    • மேதகு. யுவான் அம்புரோஸ், தூத்துக்குடி ஆயர் (2005)
    • மேதகு. பீட்டர் அபீர் அந்தோனிசாமி, சுல்தான்பேட்டை ஆயர் (2013)
Remove ads

சிறப்பு ஆலயங்கள்

தலைமை ஆயர்கள்

  • புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள்
    • பேராயர் அந்தோனி அனந்தராயர் (ஜூன் 10, 2004 - இதுவரை)
    • பேராயர் மைக்கேல் அகஸ்டின் (பிப்ரவரி 18, 1992 - ஜூன் 10, 2004)
    • பேராயர் வெண்மணி S. செல்வநாதர் (மார்ச் 17, 1973 - 1992)
    • பேராயர் அம்புரோஸ் ராயப்பன் (நவம்பர் 28, 1955 - மார்ச் 17, 1973)
    • பேராயர் அகஸ்டே-சிமியோன் கொலஸ், M.E.P. (ஜூன் 24, 1930 - அக்டோபர் 28, 1955)
    • பேராயர் ஏலி-ஜீன்-ஜோசப் மொரல், M.E.P. (மே 11, 1909 - ஆகஸ்ட் 16, 1929)
    • பேராயர் ஜோசப்-அடோல்ஃப் கான்டி, M.E.P. (செப்டம்பர் 29, 1892 - மார்ச் 25, 1909)
    • பேராயர் லாவெனன் (1886-1892)
  • பாண்டிச்சேரியின் அப்போஸ்தலிக்க பிரதிநிதிகள்
    • ஆயர் லாவெனன் (1868-1886)
    • ஆயர் காட்லே (1861-1867)
    • ஆயர் கிளமென்ட் பொன்னான்ட், M.E.P. (ஏப்ரல் 3, 1850 – மார்ச் 21, 1861)
    • ஆயர் ஹெபர்ட் (1810-1835)
    • ஆயர் சாம்பெனாய்ஸ் (1791-1801)
    • ஆயர் பிரிகாட் (1776-1791)
Remove ads

கீழுள்ள மறைமாவட்டங்கள்

மேலும் காண்க

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads