பொட்டாசியம் குரோமேட்டு

From Wikipedia, the free encyclopedia

பொட்டாசியம் குரோமேட்டு
Remove ads

பொட்டாசியம் குரோமேட்டு  (Potassium chromate) (K2CrO4) என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்த மஞ்சள் நிறத்திண்மம் குரோமேட்டு அயனியின்  பொட்டாசிய உப்பு ஆகும்.  இது ஆய்வகத்தில் பொதுவாகப் பயன்படும் வேதிப்பொருளாக உள்ளது. சோடியம் குரோமேட்டானது தொழில் துறையில் மிகவும் முக்கியமான ஒரு உப்பாகும்  இது ஆறு இணைதிறன் கொண்ட குரோமியத்தைக் கொண்டுள்ளதால், பிரிவு இரண்டின்  கீழ்வரும் புற்றுநோய்க் காரணியாகவும் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

அமைப்பு

இதன் இரண்டு வகையான படிக வடிவங்கள் அறியப்படுகின்றன. அவையிரண்டுமே தொடர்புடைய பொட்டாசியம் சல்பேட்டு வடிவங்களை மிகவும் ஒத்துப்போகின்றன.  செஞ்சாய்சதுர β-K2CrO4 வடிவமே பொதுவான வடிவமாகும். எனினும் 66 °செ வெப்பநிலைக்கு மேல், இது α-வடிவமாக மாற்றமடைகிறது.[2] சல்பேட்டு சேர்மங்கள் நான்முகி வடிவ அமைப்பைக் கொண்டிருப்பினும், குரோமேட்டு சேர்மங்களின் அமைப்பு மிகவும் சிக்கலானவையாக உள்ளது.[3]


Remove ads

தயாரிப்பும் வினைகளும்

பொட்டாசியம் டைகுரோமேட்டுடன் பொட்டாசியம் ஐதராக்சைடை வினைப்படுத்துவதால் பொட்டாசியம் குரோமேட்டு தயாரிக்கப்படுகிறது..

கரைசலாக இருக்கும்போது, பொட்டாசியம் மற்றும் சோடியம் டைகுரோமேட்டுகளின் பண்புகள் ஒரே மாதிரியாக உள்ளன. காரீய (II) நைட்ரேட்டுடன் வினைப்படுத்தும் போது இது ஆரஞ்சு மஞ்சள் நிற காரீய (II) குரோமேட்டு வீழ்படிவினைத் தருகிறது.

பயன்பாடுகள்

  • குறைந்த விலை சோடியம் உப்பு போலல்லாமல், பொட்டாசியம் உப்பானது, நீரற்ற உப்பு தேவைப்படும் சூழ்நிலைகளில் ஆய்வக பயன்பாட்டிற்காக முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
  • கரிமத்தொகுப்பு முறைகளில் இது ஒரு ஆக்சிசனேற்றியாகப் பயன்படுகிறது.
  • இது கனிம உப்புக்களைக் கண்டறியும் பண்பறி பகுப்பாய்வில் பயன்படுகிறது.

உதாரணமாக வெள்ளி அயனியைக் கண்டறிவதற்கான நிற அளவைச் சோதனையில் பயன்படுகிறது. பொட்டாசியம் குரோமேட்டானது அதிகப்படியான வெள்ளி அயனிகள் இருக்கும் நிலையில் சிவப்பு நிறமாக மாற்றமடைவதால், வெள்ளி நைட்ரேட்டு மற்றும் சோடியம் குளோரைடு இவற்றுக்கிடையேயான வீழ்படிவாக்குதல் தரம்பார்த்தலில் ஒரு இறுதிநிலை காட்டியாகப் பயன்படுகிறது. (இவை ஒன்றுக்கொன்று திட்டக்கரைசலாகவும் எதிர் தரம்பார்த்தல் கரைசலாகவும் பயன்படுத்தப்படலாம்)

பாதுகாப்பு

பொட்டாசியம் குரோமேட்டு ஒரு புற்றுநோய் காரணியாகவும் மற்றும் வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads