பேரையூர் வட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரையூர் வட்டம் , தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இந்த வட்டத்தின் தலைமையகமாக பேரையூர் நகரம் உள்ளது. தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
இந்த வட்டத்தின் அத்திப்பட்டு, எழுமலை, மோதகம், பேரையூர், சேடப்பட்டி, தே. கல்லுப்பட்டி என ஆறு உள்வட்டங்களில், 75 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 54,835 வீடுகளும், 2,00,510 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 100,448 ஆண்கள் ஆகவும்; 100,062 பெண்கள் ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 70.24% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19789 ஆகவுள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 914 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,812 மற்றும் 157 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.59%, இசுலாமியர்கள் 1.62% கிறித்தவர்கள் 0.49%% & பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads