பொட்டாசியம் ஐதரோசல்பைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொட்டாசியம் ஐதரோசல்பைடு (Potassium hydrosulfide) என்பது KHS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த நிறமற்ற உப்பில் K+ மற்றும் பைசல்பைடு [SH]− அயனிகள் உள்ளன.
Remove ads
தயாரிப்பு
நீரிய பொட்டாசியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்யும்போது அரை நடுநிலையாக்க விளைபொருளாக பொட்டாசியம் ஐதரோசல்பைடு உருவாகிறது.[2] பொட்டாசியம் சல்பைடின் நீர்கரைசல்கள் பொட்டாசியம் ஐதரோசல்பைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் கலவையைக் கொண்டுள்ளன. பொட்டாசியம் சல்பைடுடன் அதிகப்படியான ஐதரசன் சல்பைடு சேர்த்து வினைபுரியச் செய்தும் தொகுப்புமுறையில் பொட்டாசியம் ஐதரோசல்பைடு தயாரிக்கப்படுகிறது.
Remove ads
கட்டமைப்பு
பொட்டாசியம் ஐதரோசல்பைடின் கட்டமைப்பு பொட்டாசியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்திருக்கிறது.[3] [SH]− அயனிகளின் கோளமற்ற சமச்சீர்தன்மையால் இவ்வமைப்பு சிக்கலானதாக உள்ளது.
பயன்கள்
சில கரிமக் கந்தகச் சேர்மங்களின் தயாரிப்புகளில் இந்த சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[4] கந்தகம் கூடுதலாக சேர்க்கப்பட்டால் இருபொட்டாசியம் பெண்டாசல்பைடு கிடைக்கும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads