பொட்டாசியம் சல்பைடு

From Wikipedia, the free encyclopedia

பொட்டாசியம் சல்பைடு
Remove ads

பொட்டாசியம் சல்பைடு (Potassium sulfide) என்பது K2S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இத்திண்மம் அரிதாக கிடைக்கிறது. தண்ணீருடன் பொட்டாசியம் சல்பைடு வினைபுரிந்து பொட்டாசியம் ஐதரோசல்பைடு மற்றும் பொட்டாசியம் ஐதராக்சைடுகளை உருவாக்குகிறது. பொதுவாக பொட்டாசியம் சல்பைடு என்று அழைக்கப்பட்டாலும் இது ஒரு நீரற்ற திண்மம் அல்ல மேற்கண்ட இரண்டு சேர்மங்களின் கலவை ஆகும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

அமைப்பு

புளோரைட்டின் எதிர் அமைப்பை பொட்டாசியம் சல்பைடு பெற்றுள்ளது. அதாவது புளோரைட்டில் உள்ள நான்முக (F) தளங்களில் சிறிய பொட்டாசியம் (K+) அயனிகள் ஆக்ரமித்துள்ளன. பெரிய (S2−) மையங்கள் எட்டு ஒருங்கிணைவுத் தளங்களில் ஆக்ரமித்துள்ளன. Li2S, Na2S, மற்றும் Rb2S போன்ற சேர்மங்கள் பொட்டாசியம் சல்பைடு போலவே படிகமாகின்றன.[1]

தயாரிப்பு மற்றும் வினைகள்

K2SO4 உடன் கல்கரியைச் சேர்த்து சூடாக்குவதன் மூலமாக பொட்டாசியம் சல்பைடைத் தயாரிக்கலாம்.:

K2SO4 + 4 C → K2S + 4 CO

நீரற்ற அமோனியாவில் பொட்டாசியத்துடன் கந்தகத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் ஆய்வகங்களில் பொட்டாசியம் சல்பைடு தயாரிக்கப்படுகிறது.[2]

சல்பைடு ஒர் உயர் காரமாகும். ஆதலால் பொட்டாசியம் சல்பைடு முழுமையாகவும் திரும்ப மீட்சியடையாமலும் நீராற்பகுப்பு அடைகிறது.

K2S + H2O → KOH + KSH

பல செயல்முறைகளுக்கு இவ்வினை முரணாகவும் தொடர்ச்சியற்றும் காணப்படுகிறது. SH− மற்றும் OH− அயனிகளின் கலவை S2− அயனிகளின் மூலமாகச் செயல்படுகிறது. மற்ற கார உலோகங்களின் சல்பைடுகளும் இவ்வாறே செயல்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது ஆகும்.[1]

Remove ads

வானவெடிகளில் பயன்

தாழ்தர வெடிபொருள்கள் வெடிக்கும் பொழுது பொட்டாசியம் சல்பைடு உருவாகிறது. இவ்விடைநிலை சேர்மம் பட்டாசுத் தொழிலில் பல பயன்களை அளிக்கின்றது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads