பொய்க்கால் குதிரை (திரைப்படம்)
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொய்க்கால் குதிரை (Poikkal Kudhirai) 1983இல் கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1983 இந்தியத் தமிழ் மொழியில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். தயாரிப்பு கலைவாணி. இப்படத்தில் நடிகை விஜி, ரவீந்திரன் ஆகியோருடன் நடிகர் ராமகிருஷ்ணா, கவிஞர் வாலி அறிமுக நடிகர்களாக நடித்திருந்தனர். நடிகர் கமல்ஹாசன் இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். "பொய்க்கால் குதிரை" என்ற இந்தப் படம் கிரேசி மோகன்' எழுதிய "மேரேஜ் மேட் இன் சலூன்" என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு தமிழில் எடுக்கப்பட்டது.
Remove ads
கதை
"பொய்க்கால் குதிரை" என்பது சம்பந்தம் (வாலி) எந்தவொரு சிறு காரியத்திற்கும் அடுத்தவரிடம் பந்தயம் கட்டி அதில் வெற்றியும் பெறுகிறார். முத்துவிற்கு சொந்தமான( ரவீந்திரன்) சலூனிற்கு வந்த இந்து (ராமகிருஷ்ணன்) அவருடன் பந்தயத்தில் ஈடுபடுகிறான். இந்து, சம்பந்தத்தின் மகள் ஜானகியை (விஜி) காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதில் இந்து ஜானகியின் மனதை வென்று அவளைத் திருமணம் செய்து கொண்டால், சம்பந்தம் தனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொண்டு அவர்களது திருமணத்திற்கு வரவேண்டும். அவ்வாறாக இல்லாமல் சம்பந்தம் வெற்றி பெற்றால் இந்து தனது தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்பதே பந்தயம். பந்தயத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது படத்தின் மீதிக் கதைச் சொல்கிறது.
Remove ads
நடிகர்கள்
ராமகிருஷ்ணன் - இந்து
விஜி - ஜானகி
ரவீந்திரன் - முத்து
வாலி - சம்பந்தம்
சார்லி - பரமசிவம்
ராதாரவி - நாயர்
பவித்ரா - ஸ்டெல்லா
கமல்ஹாசன் - புகைப்பட சட்டத்தில் தோன்றும் பாத்திரம் (சிறப்புத் தோற்றம்)
சுஹாசினி - (கௌரவத் தோற்றம்)
வனிதா -(கௌரவத் தோற்றம்)
குயிலி
கவிதாலயா கிருஷ்ணன் - முனுசாமி
பூவிலங்கு மோகன் - மோகன்
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் - மருத்துவர்
மறு ஆக்கம்
"மேரேஜ் தாக்க அலியா " என்ற பெயரில் கன்னட மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
தயாரிப்பு
"பொய்க்கால் குதிரை" கிரேசி மோகன்' எழுதிய "மேரேஜ் மேட் இன் சலூன்" என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.[1] கன்னட நடிகர் ராமகிருஷ்ணன் கவிஞர் வாலி இருவருக்கும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நடித்திருந்தனர்.[2][3]
ஒலித்தொகுப்பு
இத்திரைப்படத்திற்கு ஒலித்தொகுப்பு மற்றும் இசையமைப்பு ம. சு. விசுவநாதன், பாடல்களை கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[4] இத்திரைப்படத்தின் ஒலித்தொகுப்பினை "சரிகம" என்ற இசைத்தட்டு நிறுவனம் வெளியிட்டது.[5]
| எண். | பாடல் | பாடியோர் | எழுதியோர் | நீளம் (m:ss) |
| 1 | "எல்லாம் தெரிகிறது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கோசலை | வாலி | |
| 2 | "நான் ஒரே ஒரு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | வாலி | |
| 3 | "பொட்டு வச்ச பொன்னுக்காக " | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | வாலி | |
| 4 | "வாய் விட்டு சிரிச்சா" | மலேசியா வாசுதேவன் | வாலி | |
| 5 | "உன்னை எனக்கு " | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | |
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads