போக்ரா மாவட்டம்
வங்காளதேசத்தின் ராஜசாகி கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
போக்ரா மாவட்டம் (Bogra District) (Bengali: বগুড়া) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ராஜசாகி கோட்டத்தில் அமைந்துள்ளது. வங்காளதேசத்தின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் போக்ரா நகரம் ஆகும். [1]

மாவட்ட எல்லைகள்
போக்ரா மாவட்டட்தின் வடக்கில் காய்பாந்தா மாவட்டம் மற்றும் ஜெய்பூர்ஹட் மாவட்டங்களும், தெற்கில் சிராஜ்கஞ்ச் மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும், கிழக்கில் ஜமால்பூர் மாவட்டம் மற்றும் ஜமுனா ஆறும், மேற்கில் நவகோன் மாவட்டம் மற்றும் நத்தோர் மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
2898.68 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட போக்ரா மாவட்டத்தின் நிர்வாக வசதிக்காக பனிரெண்டு துணை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் பதின்னொன்று நகராட்சிகளையும், 110 கிராம ஒன்றியக் குழுக்களையும், 1613 வருவாய் கிராமங்களும், 2618 கிராமங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 6600 ஆகும். தொலைபேசி சுட்டு எண் 051 ஆகும். இம்மாவட்டம் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
Remove ads
பொருளாதாரம்
வேளாண்மைப் பொருளாதாரத்தை நம்பியுள்ள இம்மாவட்டத்தில் ஜமுனா ஆறு, கர்தோ ஆறு, நகோர் ஆறு, வங்காளி ஆறு, ஹல்ஹாலியா ஆறு, தகுரியா ஆறு, பெலாய் ஆறு, கசாரியா ஆறு, சந்திரபோதி ஆறு, மனஷ் ஆறு மற்றும் வேல்கா முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது.[2]இம்மாவட்டத்தில் கரும்பு, நெல், புகையிலை, சணல், காய்கறிகள் பயிரிடப்படுகிறது. வங்காளதேசத்தின் தொழில் தலைநகரம் என போக்ரா மாவட்டத்தை அழைப்பர். இம்மாவட்டத்தில் பல கனரக தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. அவற்றில் பல தனியார் துறையில் உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் பஞ்சு மற்றும் நெசவாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள், சோப்பு, கண்ணாடி, பீங்கான் தொழிற்சாலைகளும் உள்ளது.
மக்கள் தொகையியல்
2898.68 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 34,00,874 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 17,08,806 ஆகவும், பெண்கள் 16,92,068 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 101 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1173 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 49.4% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.
Remove ads
கல்வி
வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்புகள் உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப்பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட செகண்டரி பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப்பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப்படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப்படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.
கல்வி நிலையங்கள்
இம்மாவட்டத்தில் போக்ரா மாவட்ட பள்ளியும், போக்ரா இராணுவப் பாசறை பொதுப் பள்ளி மற்றும் கல்லூரியும், போக்ரா தொழில்நுட்ப பட்டயப் படிப்பு நிறுவனமும், அரசு அசீஸுல் ஹக் கல்லூரி, அரசு முஜிபுர்ரஹ்மான் மகளிர் கல்லூரி, அரசு நசீர் அக்தர் கல்லூரி, அரசு ஷா சுல்தான் கல்லூரி, அரசு செர்பூர் கல்லூரி, அரசு முஸ்தபா அலியா மதராசா பள்ளி, போக்ரா, சயீத் சியாவுர் ரகுமான் மருத்துவக் கல்லூரி, புண்டர அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள் உள்ளது.
Remove ads
தட்ப வெப்பம்
இம்மாவட்டம் ஈரப்பத துணைவெப்பமண்டல தட்பவெப்பநிலை கொண்டது. இம்மாவட்டத்தின் கோடைக்கால அதிகபட்ச வெப்பநிலை 35.1 ° செல்சியஸ் ஆகவும், குளிர்கால வெப்பநிலை 9.8° செல்சியஸ் ஆகவும் உள்ளது. இம்மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1762 மில்லி மீட்டராக உள்ளது.
Remove ads
குறிபிடத்தக்கவர்கள்
இம்மாவட்ட மக்களில் குறிப்பிடத்தக்கவர்களில், புரபுல்ல சக்கி (1888–1908)[4], முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் முகமது அலி போக்ரா (1909 - 1963), [5] எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் எம். ஆர். அக்தர் முகுல் (1929 - 2004)[6] வங்காளதேச அதிபர் சியாவுர் ரகுமான் (1936 -1981)[7]வங்காளதேச முன்னாள் பிரதமர் பேகம் காலிதா சியா [8]ஆவார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads