போமன்ஜி ஹார்மர்ஜி வாடியா கடிகார கோபுரம்

மும்பையிலுள்ள கடிகார கோபுரம் From Wikipedia, the free encyclopedia

போமன்ஜி ஹார்மர்ஜி வாடியா கடிகார கோபுரம்
Remove ads

போமன்ஜி ஹார்மர்ஜி வாடியா கடிகார கோபுரம் ( Bomanjee Hormarjee Wadia Clock Tower ) என்பது இந்தியாவின் மும்பை கோட்டையில் உள்ள ஒரு பாரம்பரிய கட்டிடமாகும். இது 1882 ஆம் ஆண்டில் பொது நிதியைப் பயன்படுத்தி நகரின் கல்விக்காக பங்களித்த பார்சி பரோபகாரரான போமன்ஜி ஹார்மர்ஜி வாடியை கௌரவிக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டது. [1] இவர் பாம்பே நேட்டிவ் கல்விச் சங்கத்தின் உறுப்பினராகவும், எல்பின்ஸ்டோன் நிறுவனத்தின் (இப்போது எல்பின்ஸ்டோன் கல்லூரி ) குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். [2] இவர், ஜூலை 1862 இல் இறந்தார். [3]

விரைவான உண்மைகள் போமன்ஜி ஹார்மர்ஜி வாடியா கடிகார கோபுரம், அமைவிடம் ...

கட்டிடத்தில் செயல்படக்கூடிய ஒரு நீரூற்று இருக்கிறது. மேலும் முகப்பில் பாரசீக கட்டிடக்கலையின் பல கூறுகள் இன்றும் உள்ளன. ஒவ்வொரு நுழைவாயிலிலும் லம்மசு மற்றும் அலங்கரிக்கப்பட்ட அகாந்தசு இலை போன்ற வடிவமைப்பு காணப்படுகின்றன. [4] [5] இந்த அமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மேலும் பலமுறை சேதப்படுத்தப்பட்டது (கடிகார முகப்பில் இருந்து கண்ணாடி மற்றும் கைகள் அடிக்கடி திருடப்பட்டது). ஆனால் இது 2017 இல் கலா கோடா சங்கத்தின் நிதியுதவியுடன் பாதுகாப்பு கட்டிடக் கலைஞர் விகாஸ் திலாவாரி தலைமையிலான குழுவால் மீட்டெடுக்கப்பட்டது [6] [7] கோபுரத்தின் மறுசீரமைப்புத் திட்டம் , கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்பிற்கான ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் விருதுகளின் கீழ் கௌரவமான குறிப்பை வென்றது. [8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads