கிரேக்கர்

From Wikipedia, the free encyclopedia

கிரேக்கர்
Remove ads

கிரேக்கர்கள் அல்லது எலினெசு / / ˈhɛl iːnz /; கிரேக்கம்: Έλληνες ,எலைன்ஸ் [ˈelines] ) என்பது கிரெக்கம், சைப்ரஸ், அல்பேனியா, இத்தாலி, துருக்கி, எகிப்து மற்றும் நடுநிலக் கடலைச் சுற்றியுள்ள பிற நாடுகளான கிழக்கு நடுநிலக்கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளுக்குச் சொந்தமான ஓர் இனக் குழு மற்றும் தேசமாகும். உலகம் முழுவதும் கிரேக்க சமூகங்கள் பரவியுள்ளன. [43]

விரைவான உண்மைகள் Έλληνες, மொத்த மக்கள்தொகை ...

கிரேக்கக் காலனிகள் மற்றும் சமூகங்கள் வரலாற்று ரீதியாக நடுநிலக் கடல் மற்றும் கருங்கடல் கரையில் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் கிரேக்க மக்கள் ஏஜியன் மற்றும் அயோனியன் கடல்களை மையமாகக் கொண்டுள்ளனர், அங்கு கிரேக்க மொழியானது வெண்கலக் காலம் முதல் பேசப்படுகிறது. [44] [45] 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, கிரேக்க தீபகற்பம், அனத்தோலியா மேற்கு கடற்கரை, கருங்கடல் கடற்கரை, மத்திய அனதோலியாவில் உள்ள கப்படோசியா, எகிப்து, பால்கன், சைப்ரஸ் மற்றும் கான்ஸ்டண்டினோபில் இடையே கிரேக்கர்கள் பரவி இருந்தனர். [45] இவற்றில் பல பகுதிகள் 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பைசாந்தியப் பேரரசின் எல்லைகள் மற்றும் பண்டைய கிரேக்க காலனித்துவத்தின் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளுடன் பெரிய அளவில் ஒத்துப்போனது. [46] கிரேக்கர்களின் கலாச்சார மையங்களில் ஏதென்ஸ், தெசலோனிக்கா, அலெக்சாந்திரியா, இசுமிர்னா மற்றும் கான்ஸ்டண்டிநோபில் ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் அடங்கும்.

Remove ads

வரலாறு

Thumb
கதோனா (2000), சகேலரியோ (2016, 1980, 1975) மற்றும் ஃபிலாக்டோபௌலோஸ் (1975) ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்ட கிரேக்க முன்னோர்களின் பகுதி (கிமு 2200/2100-1900)

கிரேக்கர்கள் கிரேக்க மொழியைப் பேசுகிறார்கள், இது இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் குடும்பமான எலனிக் குடும்பத்திற்குள் அதன் தனித்துவமான கிளையை உருவாக்குகிறது. [45] அவர்கள் ஒரு "தொன்மையான புலம்பெயர் மக்கள்" என்று ஆண்டனி டி குறிப்பிடுகிறார். [47] [48]

தோற்றம்

2200 மற்றும் 1900 கிமு க்கு இடையில் 3வது ஆயிரமாண்டின் இறுதியில் பால்கன் குடாவின் தெற்கு முனையில் தற்போது கிரீஸ் என்று அழைக்கப்படும் பகுதிக்கு கிரேக்க முன்னோர்கள் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[49] [50] [a] கி.மு. 2ஆம் ஆயிரமாண்டில் கிரேக்க நிலப்பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்களின் வரிசையானது, பண்டைய கிரேக்க பேச்சுவழக்குகளின் அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டும் எனக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்திற்கு இடையில் அயோனியர்கள் மற்றும் அக்கீயர் (பழங்குடியினர்) ஆகியோர் இடம்பெயர்ந்தனர். இதன் விளைவாக கிமு 16 ஆம் நூற்றாண்டில் மைசீனியன் கிரேக்கம் ஏற்பட்டது. [54] [55] முதலாவது , மற்றும் இரண்டாவது டோரியன் படையெடுப்பு, கிமு 11 ஆம் நூற்றாண்டில் ஆர்காடோசைப்ரியட் பேச்சுவழக்குகளை இடமாற்றம் செய்வதற்குக் காரணமாக அமைந்தது.

Remove ads

குறிப்புகள்

  1. There is a range of interpretations: Carl Blegen dates the arrival of the Greeks around 1900 BC, John Caskey believes that there were two waves of immigrants and Robert Drews places the event as late as 1600 BC.[51][52] Numerous other theories have also been supported,[53] but there is a general consensus that the Greek tribes arrived around 2100 BC.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads