மகாத்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாத்தி நகரம் அல்லது மகாட்டி (City of Makati, /məˈkɑːtɪ/ mə-KAH-tee), பிலிப்பீன்சு தலைநகரம் மணிலா பெருநகரத்தின் பதினாறு நகரங்களில் ஒன்றாகும். மகாத்தி பிலிப்பீன்சின் நிதிய மையமாகும். பல வெளிநாட்டு தூதரகங்களும் இங்கு அமைந்திருப்பதால் பன்னாட்டுத் தொடர்பாடலுக்கும் இது முதன்மையான நகரமாக விளங்குகின்றது. 529,039 மக்கள்தொகை கொண்ட மகாத்தி நாட்டின் 16ஆவது பெரிய நகரமாகவும் உலகில் மக்கள்தொகை அடர்வைக் கொண்டு 41ஆவது நகரமாகவும் உள்ளது; இதன் மக்களடர்வு சதுர கிலோமீட்டருக்கு 19,336 குடிகளாக உள்ளது.
1960களில் மகாத்தி பிலிப்பீன்சின் நிதி தலைநகரமாக ஆனது. இங்குதான் பிலிப்பீன்சின் பங்குச்சந்தையும் மகாத்தி வணிகச் சங்கமும் உள்ளது.[3][4]
பன்முக பண்பாட்டு வாழ்க்கை நிலையுடைய வாழும் மகாத்தியில் பன்னாட்டு விவகாரங்களுக்கான மையமாகவும் விளங்குகின்றது; மெட்ரோவன் முதன்மையான கேளிக்கைத் தலமாகவும் உள்ளது.[5] பல்லின மக்களும் வாழும் இங்கு முதன்மையான அங்காடி வளாகங்களும் அடுக்கு வீடுகளும் நிதிய மையங்களும் தங்கு விடுதிகளும் கேளிக்கை மையங்களும் அமைந்துள்ளன.[6]
Remove ads
Barangay
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads