மகாநதி இரண்டாம் இரயில் பாலம்

இந்தியாவிலுள்ள பாலம் From Wikipedia, the free encyclopedia

மகாநதி இரண்டாம் இரயில் பாலம்
Remove ads

மகாநதி இரண்டாம் இரயில் பாலம் (Second Mahanadi Rail Bridge) இந்திய மாநிலமான ஒடிசாவில் கட்டாக் நகருக்கு அருகே மகாநதியின் மீது கட்டப்பட்டுள்ள இரயில் பாலமாகும்.

விரைவான உண்மைகள் மகாநதி இரண்டாம் இரயில் பாலம்Second Mahanadi Rail Bridge, ஆள்கூற்று ...

மகாநதி முதல் இரயில் பாலம் 1899 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 அன்று திறக்கப்பட்டது. ஒவ்வொன்றும் 100 அடி (30.48 மீட்டர்) நீளம் கொண்ட 64 இடைவெளிகளைக் கொண்டிருந்தது. 19 அடி 6 அங்குலம் (5.94 மீட்டர்) விட்டம் கொண்ட கிணறுகளில் குறைந்த அளவு நீர் மட்டத்திற்கும் கீழே 60 அடி (18.28 மீட்டர்) ஆழம் வரை மூழ்கியிருந்தது.[1] மகாநதி முதல் இரயில் பாலத்தின் கட்டுமானப் பொறியாளராக வில்லியம் பெக்கெட் பணியாற்றினார். 1901 ஆம் ஆண்டு பாலம் கட்டுமானம் குறித்து இவர் சமர்ப்பித்த கட்டுரைக்காக கட்டடப் பொறியாளர் நிறுவனம் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கியது.[1]

2.1 கிலோமீட்டர் (1.3 மைல்) நீளமுள்ள மகாநதி இரண்டாவது இரயில் பாலம் ₹120 கோடி (US$16 மில்லியன்) செலவில் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு 160 கி.மீ. (மணிக்கு 99.41 மைல்) வேகம் செல்லும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தாங்கவும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.[2]

Thumb
Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads