மகாபத்ம நந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாபத்ம நந்தன் (Mahapadma Nand) (கிமு 400 – 329) வட இந்தியாவின் நந்த வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். இவரது தந்தை மகாநந்தி சிசுநாக வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆவார். மகாநந்தியின் மறைவிற்குப் பின், மகாபத்ம நந்தன், தனது சகோதரர்களை வீழ்த்தி, நந்தர் வம்சத்தை நிறுவி அதன் முதல் பேரரசன் ஆனார். [1][2]
இந்து சமய புராணங்கள் மகாபத்ம நந்தனை, சத்திரியர்களைக் கொன்றழிப்பவன் என்று கூறுகிறது. [3] மகாபத்ம நந்தன் பாஞ்சாலம், காசி நாடு, கோசல நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், சூரசேனம், மிதிலை போன்ற மகாஜனபத நாடுகளை வென்று வட இந்தியாவில் நந்தப் பேரரசை விரிவுபடுத்தினான். [4][8]
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads