சூரசேனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌரசேனம் அல்லது சூரசேனம் (Sourasena, Çūrasena) (சமஸ்கிருதம்:शूरसेन}}, (Śūrasena) [1]) பண்டைய இந்தியாவின் தற்கால விரஜ மொழி பேசும் உத்திரப் பிரதேச பகுதியில் அமைந்த நாடாகும். பௌத்த சமய அங்குத்தர நியாயம் [2] எனும் நூலிலின் படி, இராமாயண இதிகாசத்தில், கி மு 1000-இல் இருந்த மகாஜனபத நாடுகளில் ஒன்றாக சூரசேன நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. கி மு ஏழாம் நூற்றாண்டில் சூரசேன நாடு வலிமை மிக்க பதினாறு மகாஜனபத நாடுகளில் ஒன்றாக விளங்கியது. [3] பண்டைய கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் இந்நாட்டை சௌரசேனி என்றும், அதன் தலைநகரத்தை மதுரா என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[4]

சூரசேனம் அல்லது சௌசேனம் எனும் யாதவ நாடுகளில் ஒன்றாகும். பண்டைய புராண கால இந்தியாவின், தற்கால விரஜ மொழி பேசும் உத்தரப் பிரதேசத்தின், மதுரா பகுதியாகும். சூரசேன நாட்டைக் குறித்தான செய்திகள், பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ளது. சூரசேன நாட்டின் மன்னர் உக்கிரசேனரை கம்சன் சிறையில் அடைத்து நாட்டை ஆண்டான்.
Remove ads
சொல்லிலக்கணம்
சூரசேனம் என்ற சொல்லிற்குத் தரப்பட்ட பல்வேறு விளக்கங்களில், சந்திர குல மன்னர் யயாதியின் மூத்த மகன் யதுவின் வழித்தோண்றல்களான யாதவ குலத்தின் பல கிளைப் பிரிவுகளில் சூரசேனிகள் என்பவர்கள், சூரசேனம் நாட்டை நிறுவினர். [5][6]
சூரசேன நாட்டின் தலைநகரான மதுராவின் சிறையில் கிருஷ்ணர் பிறந்து, பின் இந்நாட்டை சில ஆண்டுகள் ஆண்டு, பின்னர் துவாரகை நகரை புதிதாகக் கட்டி ஆண்டார். [7]
சூரசேனிகள் போன்று யாதவ குலத்தில் விருஷ்ணிகள், சேதிகள், விதர்பர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், குந்திகள் எனப் பல உட்பிரிவுகள் தோண்றியது. கிருஷ்ணர் மற்றும் பலராமன் யது குலத்தின் விருஷ்ணி குலப் பிரிவினர் ஆவர்.
Remove ads
வரலாறு
மகாபாரதம் மற்றும் புராணங்களின் படி, சூரசேனம் எனும் நாடு தற்கால மதுராவையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட யாதவர்களின் உட் பிரிவினர்கள் ஆண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் விருஷ்ணிகள் ஆவர்.[8][9] மதுராவை தலைநகராக கொண்ட அவந்தி நாட்டின் மன்னன் சூரசேனரின் ஆட்சிக் காலத்தில், கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான காத்தியாயனர், அவந்தி நாட்டில் பௌத்த சமயத்தை பரப்பினார் என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதாரம்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads