மகாபுராணம் (சமணம்)

From Wikipedia, the free encyclopedia

மகாபுராணம் (சமணம்)
Remove ads

மகாபுராணம் சமணர்களின் வேதமாகிய ‘பரமாகமம்’ என்பதற்கு வழங்கும் மற்றொரு பெயர். இந்த நூல் வடமொழியில் உள்ளது. இது நான்கு பிரிவுகளைக் கொண்டது. பிரதமானுயோகம் இதன் முதல் பிரிவு. இது 250 ஆயிரங்கோடி சுலோகங்களைக் கொண்டது என்பர். இதனை எழுதியவர் ஜினசேனர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் மகாபுராணம், தகவல்கள் ...

சமண புராணத் தலைவர்கள் 63 பேர். வேதப் பகுதி மற்றும் ரிசபதேவர் வரலாறும் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ளன.

கவி பரமேசுவரர் என்பவரும் அவருடைய மாணாக்கர் குணபத்திரர் என்பவரும் மகாபுராண சங்கிரகம் பாடிமுடித்தனர். இது இரண்டு பிரிவுகளாக உள்ளது. முதல் பிரிவு பூர்வபுராணம். ‘விருசபர் பரத சக்கரவர்த்தி’ வரலாறு இதில் கூறப்பட்டுள்ளது. இரண்டாம் பிரிவு உத்தர புராணம். இதில் ஏனைய 61 பேர் வரலாறு கூறப்பட்டுள்ளது.

இது 9 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். இந்த நூல் பெரிதாகையால் இதில் 'கயிறு சாத்தி'ப் பலன் அறியும் பழக்கம் சமணர்களிடம் இருந்தது. பெரிய சுவடிக் கட்டுக்குள் கயிறு ஒன்றை விட்டு, சுவடியின் அந்தப் பக்கத்திலுள்ள செய்திகளைப் படித்து, தனக்குச் சொல்லப்பட்ட பலனாக அதனைக் கொள்வதைக் 'கயிறு சாத்தல்' என்பர்.

Remove ads

இதனையும் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads