மகாலங்கூர் இமால்

வடகிழக்கு நேபாளம் மற்றும் தென் மத்திய திபெத்தில் உள்ள இமயமலையின் பகுதி From Wikipedia, the free encyclopedia

மகாலங்கூர் இமால்
Remove ads

மகாலங்கூர் இமால் (Mahālangūr Himāl) என்பது வடகிழக்கு நேபாளம் மற்றும் சீனாவின் தெற்கு மத்திய திபெத் ஆகிய பகுதிகளுக்கு இடையிலுள்ள இமய மலையின் ஒரு பிரிவாகும். நேங்பா கணவாய் மற்றும் ரோல்வாலிங் இமால் மற்றும் சோ ஓயு ஆகியவற்றுக்கு இடையில் கிழக்கு நோக்கி அருண் ஆறு வரைக்கும் நீண்டுள்ளது [1].

விரைவான உண்மைகள் மகாலங்கூர் இமால், உயர்ந்த புள்ளி ...

எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் நான்கு இத்துணைத் தொடரிலேயே உள்ளன. எவரெஸ்ட், லோட்சே, மக்காலு, சோ ஓயு ஆகிய மேற்படி மலைகளுடன், வேறும் பல முக்கிய மலைகள் இதில் உள்ளன. இதனால் இதை உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர் எனலாம். இதன் திபேத் பக்கத்தில், ரோங்புக் பனியாறும், காங்சங் பனியாறும் உள்ளன. நேபாளப் பக்கத்தில், கோசும்பா பனியாறு, கும்பு பனியாறு என்பவை இருக்கின்றன. எவரெஸ்ட் மலைமுகட்டில் ஏறுவதற்கான வழமையான பாதை கோசும்பாப் பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதியே இத் தொடரில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட பகுதியாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads