மக்காலு

இமாலய மலை From Wikipedia, the free encyclopedia

மக்காலு
Remove ads

மக்காலு (நேபாளத்தில் ஏற்புடைய பெயர் मकालु'; சீனாவில் ஏற்புடைய பெயர் மக்காரு:马卡鲁山; பின்யின்:மக்காலு ஷான் Mǎkǎlǔ Shān) உலகிலேயே ஐந்தாவது உயரமான மலை. இது இமய மலைத் தொடரில் எவரெஸ்ட் மலைக்கு கிழக்கே 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மக்காலு தனி முகடாக நான்கு முகம் கொண்ட சதுரவடி கூம்புப் பட்டகம் போல் உள்ளது. மலையின் உச்சி கடல் மட்டத்தில் இருந்து 8,462 மீட்டர் (27,762 அடி) உயரத்தில் உள்ளது. உயரமான பின்புல மலைப்பகுதியில் இருந்து இதன் தனி முகடு மட்டுமே 2,386 மீ (7,828 அடி) நிற்கின்றது.

விரைவான உண்மைகள் Makalu, உயர்ந்த புள்ளி ...

மக்காலு மலையை ஒட்டி இரு துணை முகடுகள் உள்ளன. அவற்றுள் வடமேற்கே ஏறத்தாழ 3 கி.மீ தொலைவில் கங்ச்சுங்ஸ்ட்டே (Kangchungtse,) அல்லது மக்காலு-2 என்னும் மலைமுகடு உள்ளது. அதன் உயரம் 7,678 மீ (25,190 அடி). மக்காலு மலைக்கு 4 கி.மீ தொலைவில் மக்காலு-2 உடன் ஒட்டி இரண்டாவது துணை முகடு உள்ளது. இதன் பெயர் சோமோ லோன்சோ (Chomo Lonzo). இதன் உயரம் 7,818 மீ (25,650 அடி).

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads