மலைத் தொடர்
புவியியல் சார்ந்த பல மலைகளைக் கொண்ட புவியியல் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலைத்தொடர் (ஆங்கிலம்: Mountain range) என்பது மலைகள் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட தொடர்ச்சியைக் குறிப்பிடுவதாகும்.[1] ஒரு மலைத் தொடரில் உள்ள மலைகள் இணைக்கப்பட்டு இருந்தாலும் அவை ஒரே வகைப் பாறையாலோ அல்லது மண்ணாலோ ஆனவை எனக் கூற முடியாது.



அவை புவித்தட்டுக்களின் நகர்வினாலும் எரிமலை வெடிப்பினாலும் உருவாகலாம். மலைத்தொடருக்குச் சிறந்த உதாரணமாக இமயமலைத் தொடரைக் குறிப்பிடலாம். மலைத்தொடர்கள் நிலத்தில் மட்டுமல்லாமல் ஆழ்கடலிலும் காணப்படும்.[2]
Remove ads
முக்கிய மலைத்தொடர்கள்
- நடுக்கடல் முகடு -புவியில் மிகவும் நீளமான மலைத் தொடர்.[3]
- இமயமலை - புவியில் மிகவும் உயரமான மலைத்தொடர்.
- அந்தீசு மலைத்தொடர் - நிலத்தில் மிகவும் நீளமான மலைத்தொடர்.
- ஆல்ப்ஸ் மலைத்தொடர்
- யூரால் மலைத்தொடர் - ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் மலைத்தொடர்.
- ரொக்கி மலைத்தொடர்
காலநிலையில் ஏற்படுத்தும் செல்வாக்கு
உயரமான மலைத்தொடர்கள் காலநிலையில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இவை காற்று வீசும் திசையில் அதிக மழையையும் மற்றைய திசையில் மழையற்ற நிலமையையும் உருவாக்கும்.[4]
அந்தீசு மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் அதிக மழை கிடைப்பதும் மேற்குப்பகுதி பாலைவனமாய் இருப்பதும் ஒரு காரணமாகும்.[5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads