மகேந்திரவாடி

From Wikipedia, the free encyclopedia

மகேந்திரவாடி
Remove ads

மகேந்திரவாடி குடைவரை, இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் உள்ள மகேந்திரவாடியில் அமைந்துள்ள குடைவரை ஆகும்.

விரைவான உண்மைகள் மகேந்திரவாடி மகேந்திரபுரம், நாடு ...
Remove ads

அமைவிடம்

மகேந்திரவாடியானது சென்னையில் இருந்து 88 கி.மீ. தொலைவிலும், சோளிங்கர் தொடருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், காஞ்சியிலிருந்து 30 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

வெளியொன்றின் நடுவே நிலத்திலிருந்து துருத்திக்கொண்டு உள்ள பாறை ஒன்றில் இந்தக் குடைவரை அமைக்கப்பட்டு உள்ளது. இது குணபரன் என்று அழைக்கப்படும் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது. இங்கே பல்லவ கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. இதிலிருந்து இக்குடைவரைக் கோயிலின் பெயர் "மகேந்திர விட்டுணு கிரகம்" என்பதும், முராரி எனப்படும் திருமாலுக்கு உரிய கோயில் என்பதும் தெரிய வருகிறது.[2]

இதில் உள்ள மண்டபம் இரண்டு பிரிவுகளாக உள்ளது. இரண்டு வரிசைகளில் வரிசைக்கு இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவர்களை அண்டி இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. தூண்களின் கீழ்ப் பாகமும் மேல் பாகமும் சதுர வெட்டுமுகம் கொண்டவை. நடுப்பகுதி எட்டுப் பட்டை வடிவம் கொண்டது. முன்வரிசைத் தூண்களின் சதுரப் பகுதிகளில் தாமரைச் சிற்பங்கள் உள்ளன. ஆனால் உள் வரிசைத் தூண்களின் சதுரப் பகுதிகள் வெறுமையாகவே காணப்படுகின்றன. பின்பக்கச் சுவரில் ஒரு கருவறை குடையப்பட்டுள்ளது. கருவறை வாயிலுக்கு இருபக்கமும் வாயிற் காவலர் சிற்பங்கள் உள்ளன.[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads