மகேந்திரா

From Wikipedia, the free encyclopedia

மகேந்திரா
Remove ads

மகேந்திர வீர விக்ரம் ஷா (Mahendra Bir Bikram Shah) (நேபாளி: महेन्द्र वीर विक्रम शाह; 11 சூன் 1920 – 31 சனவரி 1972) நேபாள இராச்சியத்தின் மன்னராக 1955 முதல் 1972 முடிய இருந்தவர். [4]

விரைவான உண்மைகள் மகேந்திர வீர விக்ரம் ஷா, நேபாள மன்னர் ...
Remove ads

இளமை வாழ்க்கை

Thumb
நேபாள மன்னர் திரிபுவன் மற்றும் மூன்று மூத்த குழந்தைகளுடன்; மகேந்திரா (நிற்பவர்), வசுந்தரா மற்றும் ஹிமாலயா (அமர்ந்திருப்பவர்கள்), ஆண்டு 1932

மகேந்திரா, மன்னர் திரிபுவன் - ராணி காந்தி தேவி இணையருக்கு 11 சூன் 1920ல் பிறந்தவர். இளவரசர் மகேந்திரா 1940ல் நேபாள பிரதம அமைச்சர் ஹரி சாம்செர் ராணாவின் மகளான இந்திராவை மணந்தவர்.[5][6]பின்னர் ராணி இந்திராவின் தங்கையான காந்தி தேவியை மணந்தார். மகேந்திரா - காந்திதேவி இணையரின் மூன்று மகன்கள் பிரேந்திரா, ஞானேந்திரா, திரேந்திரா; மூன்று மகள்கள் இளவரசி சாந்தி, இளவரசி சாரதா மற்றும் இளவரசி சோவா ஆவார்கள்.[7] 1952ல் மன்னர் மகேந்திரா ரத்தினா தேவியை மணந்தார்.

1951 இல் ராணா வம்சத்தினர் பரம்பரையாக பிரதம அமைச்சராகும் உரிமை பறிக்கப்பட்டப் பின்னர், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா நேபாளத்தின் முதல் பிரதம அமைச்சரானார். நேபாள இராச்சியத்திற்கு நேபாளம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, முழு முடியாட்சி முறை அகற்றபட்டு அரசியலமைப்புக்குட்ட முடியாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

Remove ads

ஆட்சிக் காலம்

Thumb
மன்னர் மகேந்திரா மற்றும் ராணி இரத்தினா, ஆண்டு 1957

மன்னர் திரிபுவனின் மறைவிற்குப் பின், மகேந்திரா 13 மார்ச் 1955 இல் நேபாள மன்னராகப் பதவியேற்றார்.[8][9]

நேபாள உள்நாடு கலவரம், 1960

15 டிசம்பர் 1960 இல் மன்னர் மகேந்திரா அரசியலமைப்பு சட்டத்தை இடைநீக்கம் செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள நாடாளுமன்றத்தையும்[10] அமைச்சரவையையும் கலைத்து விட்டு,[11]நேபாளத்தில் மன்னரின் நேரடி ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தினார். நேபாள பிரதம அமைச்சராக இருந்த விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவையும் அவரது நெருங்கிய கூட்டாளிகளையும் சிறையில் அடைத்தார். [12][13] மன்னர் மகேந்திரா நேபாளத்தின் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் தேசிய அளவிலும் பஞ்சாயத்து ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தினார்.[14]வெளிநாட்டு விவகாரத்தில் மன்னர் மகேந்திரா, இந்தியா - சீனா நாடுளைப் பொறுத்த வரை நடுநிலைக் கொள்கையைக் கடைபிடித்தார்.

பஞ்சாயத்து ஆட்சிக் காலம் (1960 – 72)

1960 இல் முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, நாட்டின் நிர்வாகத்தை மன்னர் மகேந்திரா தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தார். நேபாளி காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டது. மனித உரிமைகள், ஊடக உரிமைகள் மறுக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். நேபாளி காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளற்ற ஜனநாயக முறையில் நிறுவப்பட்ட பஞ்சாயத்து அமைப்பின் மூலம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் நாட்டின் முழு அதிகாரங்களும் மன்னரின் கையில் இருந்தது. [15] இந்நடைமுறைக்கு எதிரானவர்களை தேச விரோத சக்திகள் எனப்பட்டனர். [16]

நாட்டின் நிர்வாகத்திற்கு மன்னருக்கு ஆலோசனை கூற, 26 டிசம்பர் 1961 இல் ஐந்து அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை மன்னர் மகேந்திரா நியமித்தார்.

மன்னர் மகேந்திரா நிலச்சீர்திருத்த திட்டங்களைக் கொண்டு வந்தார். அதன் மூலம் நிலம் அற்றவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. நேபாளத்தின் தராய் பகுதியில் கிழக்கு - மேற்காக செல்லும் தேசிய நெடுஞ்சாலையான மகேந்திரா நெடுஞ்சாலையை அமைத்தார். மன்னர் மகேந்திரா, கிராமப்புற வளர்ச்சிக்காக 1967 இல் ”கிராமங்களை நோக்கி” எனும் தேசிய இயக்கத்தைக் கொண்டு வந்தார். 1955ல் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினராக நேபாள நாடு சேர்க்கப்பட்டது.

Remove ads

இறப்பு

1972 மன்னர் மகேந்திரா சித்வான் காட்டில் வேட்டையாடச் சென்ற போது மாரடைப்பால் அவரது உடல் நலம் குன்றியது.[17] மன்னர் மகேந்திரா 31 சனவரி 1972 இல் பரத்பூரில் காலமானார்.[18]

மகேந்திராவின் மகன் பிரேந்திரா [19] 24 பிப்ரவரி 1972 இல் நேபாளத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார். 1 சூன் 2001ல் நடைபெற்ற அரச குடும்ப படுகொலையின் போது மன்னர் பிரேந்திரா உள்ளிட்ட பல அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

முன்னர் நேபாள பட்டத்து இளவரசர்
1920–1950
பின்னர்
முன்னர் நேபாள இளவரசர்
1951–1955
பின்னர்
முன்னர் நேபாள மன்னர்
1955–1972

அடிக்குறிப்புகள்

  • ^1 Possibly no heir for the time period of 1911 through 1920. Previous Crown Prince: Tribhuvan Bir Bikram Shah, from 1906 to 1911.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads