மக்கள் தொலைக்காட்சி

From Wikipedia, the free encyclopedia

மக்கள் தொலைக்காட்சி
Remove ads

மக்கள் தொலைக்காட்சி, மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி செப்டம்பர் 6, 2006 இல் தொடங்கப்பட்டது.[1] இன உணர்வும் சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி "மண் பயனுற வேண்டும்" என்னும் நோக்கத்தை இத்தொலைக்காட்சி முன்வைத்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் மக்கள் தொலைக்காட்சி, ஒளிபரப்பு தொடக்கம் ...
Thumb
மக்கள் தொலைக்காட்சியின் சின்னம்

சமுதாயத்துக்குத் தீங்கானவை என இந்நிறுவனம் கருதும் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ளாமை[சான்று தேவை], இந்திய வணிகத் திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் தங்கியிராமை[சான்று தேவை], நெடுந்தொடர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமை[சான்று தேவை] என்பவற்றின் மூலம் இத்தொலைக்காட்சி பிற தொலைக்காட்சிச் சேவைகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது.

பல தமிழ் ஊடகங்கள் பெருமளவில் பிறமொழிச் சொற்களைக் கலந்து நிகழ்ச்சிகளை வழங்கிவரும் காலகட்டத்தில் பிற மொழிகள் அதிகம் கலவாமல் நிகழ்ச்சிகளை வழங்குவதிலும் இத்தொலைக்காட்சி கூடிய கவனமெடுத்துக்கொள்கிறது. இதற்காக இதன் ஊழியர்களுக்குப் போதிய தமிழ்ப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிகிறது. இது மட்டுமல்லாது, தொலைக்காட்சி நேயர்களிடையே நல்ல தமிழ்ப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் பல நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அறிஞர்கள் பதிலளிக்கும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், தமிழ் பேசு தங்கக் காசு போன்ற போட்டி நிகழ்ச்சிகள் என்பன இத்தகையவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

தமிழகத்தின் ஊரகப் பண்பாடு தொடர்பான பல நிகழ்ச்சிகளுக்கும் இத்தொலைக்காட்சி முதன்மை அளித்து வருகிறது.[சான்று தேவை]

Remove ads

நிகழ்ச்சிகள்

தமிழை வளர்க்கவும், நல்ல தமிழை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நடத்தப்படும் முதன்மையான சில நிகழ்ச்சிகள் இங்கே:

மேலதிகத் தகவல்கள் நிகழ்ச்சியின் பெயர், நேரம் ...
Remove ads

விருதுகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழாகச் செயல்பட்டு வரும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத் தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி ஊடகத்திற்கான தூய தமிழ் ஊடக விருது 2020 ஆம் ஆண்டுக்கு இத்தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads