மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)
மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு) From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்கள் நலக் கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, 2015 அக்டோபரில் ஏற்படுத்திய ஒரு அரசியல் கூட்டு இயக்கமாக மக்கள் நலக் கூட்டு இயக்கம் என்ற பெயரில் அமைந்தது.[1]
கூட்டணி வரலாறு
- 2016 தமிழக சட்டமன்ற தேர்தலின் போது இக்கூட்டணியில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்தது.
- மேலும் இக்கூட்டணி தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் விஜயகாந்த் அவர்களை அணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார்.
- தமிழக தேர்தல் வரலாற்றில் தமிழக உள்நாட்டு கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து பலமான பெரும் கூட்டணியாக உருவாக்கி கொண்டு தேர்தலை சந்தித்தனர்.
- தேமுதிக, மதிமுக, விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் இணைந்து போட்டியிட்ட போதிலும் எந்த கட்சிக்கும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
- பின்பு 2016 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் கள சூழ்நிலை மாறியதால் இக்கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா கட்சிகள் வெளியேறினார்.
- மேலும் இக்கூட்டணியை உருவாக்கிய தலைமை ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் தனது மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இருந்த கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம் உடன் திமுக கூட்டணியில் இணைந்து செயல்பட்டார்.[2]
Remove ads
தோற்றம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியின் காரணமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்ற மக்கள் நலக் கூட்டியக்கம் எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி வெளியேறியது. இந்தக் கூட்டமைப்பு, தேர்தல் செயல்பாட்டுக்காக மக்கள் நலக் கூட்டணி என 2 நவம்பர் 2015 அன்று அதிகாரப்பூர்வமாக புது வடிவம் பெற்றது. தேர்தலுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனுக்காக மக்கள் நலக் கூட்டியக்கம் எனும் பெயரில் கூட்டமைப்பு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.[3][4].
Remove ads
குறிக்கோளும், எதிர்காலத் திட்டங்களும்
2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தல்; கூட்டணியில் ஒருவர் முதலமைச்சராக பதவியேற்பார்.
2016 சட்டமன்ற தேர்தல்
- முதலில் வைகோ அவர்கள் தலைமையில் மக்கள் நல கூட்டு இயக்கமாக செயல்பட்டு வந்த போது அதில் வைகோவின் மதிமுக, திருமாவளவனின் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் இருந்தனர்.
- 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக் கூட்டு இயக்கம் மக்கள் நலக் கூட்டணியாக மாற்றம் பெற்றது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக மதிமுக தலைவர் வைகோ அவர்களே செயல்பட்டார்.
- இக்கூட்டணியில் வைகோவின் அரசியல் சீர்திருத்த கருத்துகளை பாராட்டி ஜி. கே. வாசனின் தமாகா, விஜயகாந்தின் தேமுதிக கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தனர்.
- பின்பு இக்கூட்டணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் பொறுப்பை தலைமை ஒருங்கிணைப்பாளர் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் ஏற்க மறுத்த போதிலும் அப்பொறுப்பு விசிக தலைவர் திருமாவளவனை தேடி வந்தது. அவரும் முதல்வர் பொறுப்பை ஏற்க மறுத்தார்.
- அதன் பிறகு இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத்தின் முன்னணி மூத்த தலைவரான நல்லகண்ணுவை நோக்கி முதலமைச்சர் வேட்பாளர் பொறுப்பு வந்தபோதிலும்.
- அதை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியில் வெற்றி பெற்றால் முதலமைச்சர் வேட்பாளர் பதவியோ அல்லது அமைச்சரவையில் மந்திரி பதவியோ ஏற்காமல் வெளியிலிருந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று கூறினார்.
- அதன் பிறகு தேமுதிகவுடன் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டு 23 மார்ச் 2016 அன்று அதிகாரப்பூர்வமாக [5] அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads