தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2006 From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (Legislative Assembly election) 2016 மே 16 இல் இடம்பெற்றது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு இடம்பெற்ற இத்தேர்தலில் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் பெரும் கட்சிகளோடு கூட்டணி அமைக்காமல் சிறிய கட்சிகளுடன் ஒரிரு தொகுதியில் தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனிபெரும்பான்மையோடு தொடர் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். எதிர்கட்சியான மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களைக் கைப்பற்றி தமிழக தேர்தல் வரலாற்றிலேயே அதிகமான தொகுதிகளை கைப்பற்றி கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்து பலமான எதிர்கட்சியாக செயல்பட்டது. திமுக தலைமையிலான ஐமுகூ கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களை கைப்பற்றியது. முஸ்லிம் லீக் 1 இடத்தையும் கைப்பற்றியது.[3][4][5][6] விஜயகாந்தின் தேமுதிக தலைமையில் மதிமுக தலைவர் வைகோ உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தனித்து போட்டியிட்ட ராமதாஸ் அவர்களின் பாமக, சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி மற்றும் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேஜகூ போட்டியிட்ட கட்சிகள் எத்தொகுதியையும் கைப்பற்றவில்லை. வாக்குகள் எண்ணும் பணி 2016 மே 19 அன்று நடைபெற்றது.

Remove ads
தேர்தல் அட்டவணை
தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[7].
வாக்காளர் பட்டியல்
ஏப்ரல் 29, 2016 அன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி[8]:
- பெண் வாக்காளர்கள் = 2,93,33,927
- ஆண் வாக்காளர்கள் = 2,88,62,973
- மூன்றாம் பாலினத்தவர் = 4,720
வயதுவாரியாக
- 18 முதல் 19 வயதுடையோர் - 21.05 இலட்சம்
- 20 முதல் 29 வயதுடையோர் - 1.17 கோடி
- 30 முதல் 39 வயதுடையோர் - 1.39 கோடி
- 40 முதல் 49 வயதுடையோர் - 1.24 கோடி
- 50 முதல் 59 வயதுடையோர் - 87.32 இலட்சம்
- 60 முதல் 69 வயதுடையோர் - 56.15 இலட்சம்
- 70 முதல் 79 வயதுடையோர் - 26.58 இலட்சம்
- 80 வயதிற்கு மேற்பட்டோர் - 8.4 இலட்சம்
அதிக வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்களும்
- சோளிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி - 6.02 இலட்சம் வாக்காளர்கள்
- கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி - 1.86 இலட்சம் வாக்காளர்கள்
Remove ads
தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள்
அரசியல் நிலவரம்
- கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் செய்த பல நல்ல திட்டங்களாலும், மக்களிடையே ஏற்பட்ட நற்பெயராலும், மக்கள் செல்வாக்காலும் தொடர் வெற்றி தொடர் ஆட்சி என்று அதிமுகவில் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றார்.
- அதிமுகவின் தொடர் வெற்றி தொடர் ஆட்சி என்பது இக்கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆர்க்கு பிறகு 30 வருடங்கள் கழித்து தொடர் வெற்றி தொடர் ஆட்சி என்ற நிலை ஜெயலலிதா தலைமையில் அமைந்தது இது முதல் முறையாகும்.
- முந்தைய திமுக (2006–2011) ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களையும் அக்கட்சியினர் செய்த முறைகேடுகள் மற்றும் வன்முறை செயல்களால் அக்கட்சியின் அமைச்சர்களும், பெரும் தலைவர்களும் ஊழல் வழக்குகளால் தனிநீதிமன்ற விசாரணைக்கும், சிறைக்கும் சென்ற நிகழ்வுகள் மக்களிடையே பெரும் வெறுப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அக்கட்சியில் மு. கருணாநிதி வையோதிகத்தை காரணம் காட்டி அக்கட்சியில் அடுத்த முதல்வர் யார் என்று எழுந்த வாரிசு அரசியல் பிரச்சனைகள் கடந்த தேர்தலில் இருந்து வந்த பதவி சிக்கல்கள் ஓயாத நிலையிலும்.
- அவர்கள் ஆட்சி காலத்தில் செய்த பெரும் ஊழல் முறைகேடுகளாலும் இத்தேர்தலில் திமுக கடந்த தேர்தலில் ஈழம் அழித்து ஊழல் செய்த கூட்டணி என்று விமர்சிக்கபட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது தமிழகத்தில் உள்ள பல எதிர்கட்சி தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கபட்டதாலும். தமிழக மக்களிடையே திமுக வெற்றி பெரும் வாய்ப்பை காங்கிரஸ் உடனான கூட்டணியால் திமுகவின் வாக்குகள் சரிந்து வெற்றி வாய்ப்பு பரிபோனது என்றும் கூறப்படுகிறது.
- மேலும் இம்முறையும் மத்தியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்ததால். இம்முறையும் மக்கள் திமுக வெற்றி பெரும் முக்கியமான தொகுதிகளில் கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு கொடுத்ததால். திமுகவிற்கு வரவேண்டிய வெற்றி பெரும்பான்மை வாக்குகள் சிதறடிக்கபட்டு காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியாலும், லயப்பில்லாததாலும் அத்தொகுதிகளில் எதிர்கட்சியான அதிமுகவை ஆதரித்து வெற்றி பெறவைத்தனர்.
- திமுக ஆட்சி காலத்தில் திரைத்துறையை தனது வரைமுறையற்ற கட்டுப்பாட்டில் வைத்திருந்தை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் பேர் உதவியால் மீட்கப்பட்டது.
- கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட இலவச பொருட்கள் ஆன அம்மா மிக்சி, கிரைண்டர், மேசை மின்விசிறி போன்ற இலவச பொருட்கள் அனைத்து மக்களையும் சென்று அடைந்தது.
- மேலும் இத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் கடந்த தேர்தல்களில் அறிவித்த இலவச பொருட்கள் வழங்குதலை பல தரப்பு அரசியல் கட்சி தலைவர்களால் விமர்சிக்கப்பட்டதால். அதனை இரு கட்சிகளும் தவிர்த்துவிட்டனர்.
- அதற்கு பதிலாக இலவச சலுகைகளாக அதிமுகவில் ஜெயலலிதா அனைத்து வீடுகளிலும் குடும்ப தலைவி ஒருவர்களுக்கு இரு சக்கர பெண்கள் மகிழுந்து (Scooty), இலவச கைப்பேசி (Cell Phone), வீடுகளில் 100 சதவீதம் மின்சாரம் இலவசம் போன்ற சலுகைகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருந்தது.
- திமுக தேர்தல் அறிக்கையில் சலுகைகள் மக்களுக்கு ஏற்புடையதாக எதுவும் இல்லததாலும் இத்தேர்தலில் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
- மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் "பூரண மதுவிலக்கு" செய்ய போவதாக கூறி ஸ்டாலின் பிரச்சாரம் செய்த போதிலும் அது நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமில்லாத கொரிக்கை என்று கூறி தமிழக மக்கள் அந்த வாக்குறுதிகளை ஏற்காமல் புறம் தள்ளினர்.
- மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்களுக்கு பல பயன் உள்ள திட்டங்களையும், மக்களுக்கு தேவையான உதவிகளுக்கு அரசாங்க சார்பில் அமைப்பாக உருவாக்கி மக்களின் குறைகளை தீர்த்தார்.
- கல்வித்துறையில் சாதனை கல்வியில் சரியான இட ஒதுக்கீடு அனைவருக்கும் கல்வி என்ற முறையால் இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கு "இலவச பாடப்பொருள்கள் கூடிய பாட பை", "புத்தகம்", "சீறுடை", "டிஃபன் பாக்ஸ்", "வாட்டர் பாட்டில்", "மடிக்கணினி", "இலவச மீதிவண்டி" போன்றவை வழங்கப்பட்டது.
- மேலும் கடந்த ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அவர்கள் கல்வி பயின்று முடித்தவர்களுக்கு உதவி ஊக்க தொகை வழுங்குதல்.
- அதே போல் 10 மற்றும் 12 வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் தனது பள்ளி இறுதி நாட்களில் பள்ளியில் இருந்தபடியே நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னை பதிய வைத்து கொள்ளும் முறையை செயல்படுத்தினார்.
- கல்லூரி பட்டம் பெற்ற மாணவர்கள் தனது கல்லூரியில் இருந்து நேர்முக காணல் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புக்கு செல்லும் முறையையும் அறிமுகப்படுத்தினார்.
- மேலும் படித்து பட்டம் பெற்ற மாணவ கண்மணிகள் அரசு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்காமல் சுயதொழில் மற்றும் சுயவேலை வாய்ப்பு செய்து தருவதற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கும் முறையை செயல்படுத்தினார்.
- திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவி தொகை வழுங்குதல். திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
- தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலை கடையில் எப்போதும் அனைத்து பொருட்களுடனும் அவ்வபோது அரசாங்கம் அறிவித்த சலுகைகளையும் தவறாமல் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்பட்டது.
- முந்தைய திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கபடாத பல மணிநேர மின்வெட்டை தடை செய்து தடையில்ல மின்சாரம் வழங்கபட்டது.
- அம்மா உணவகம் என்ற பெயரில் அனைவருக்கும் உணவு என்ற முறையில் குறைந்த விலையில் நிறைவான உணவு என்ற முறையில் தரமான சைவ உணவை வழங்கி சிறப்பாக கையாண்டது மக்களுக்கு மிகவும் பலன் அளித்தது. இத்திட்டம் பக்கத்து மாநில மக்களாளும், அரசியல் தலைவர்களாளும் பாராட்டி பேசப்பட்டது.
- இந்த உணவு திட்டத்தை அந்த மாநிலத்திலும் அரசியல் தலைவர்களால் தொடங்கப்பட்டது.
- அம்மா குடிநீர் திட்டத்தை தூய்மையான சுத்திகரிக்கப்பட்ட நல்ல குடிநீரை மக்கள் பருக வேண்டும். என்ற நோக்கத்துடன் 10 ரூபாய்க்கு மலிவு விலையில் விற்பனை செய்யபட்டு சாமானிய மக்களுக்கும் தாகம் தீர்க்க வகை செய்தது.
- அம்மா மருந்தகம் குறைந்த விலையில் அனைத்து நோய்களுக்கும் தரமான மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது.
- அம்மா சொகுசு பேருந்து, அம்மா சிற்றுந்து என தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு கிராமங்கள் வரை மக்கள் சென்று பயன்பெற தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஜெயலலிதாவால் இயக்கப்பட்டது.
- அறநிலைகட்டுபாட்டில் உள்ள அனைத்து பெரும் திருக்கோயில்களிலும் அனைத்து பெரிய இரயில் நிலையங்களிலும் முதியோர்களுக்கு ஏறி செல்வதற்கு ஏதுவாக தானியங்கி மகிழுந்து (Battery Car) திட்டத்தை ஜெயலலிதாவால் தொடங்கபட்டது.
- ஜெயலலிதாவால் தனது முந்தைய ஆட்சி காலத்தில் (1991-1996) ஆட்சி காலத்தில் தொடங்கபட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை குழந்தை மகப்பேறு திட்டமாக மாற்றி அறிவித்து மகப்பேறு காலத்தில் உள்ள அனைத்து மகளிர்களுக்கும் அரசு மற்றும் தனியார் வேலைகளில் இருக்கும் மகளிர்களுக்கும் விடுமுறையுடன் கூடிய இலவச மகப்பேறு மருத்துவ திட்டம் மற்றும் குழந்தை பேறுக்கு பிறகு குழந்தைக்கு தேவையான பொருட்கள் உடன் கூடிய பெட்டிகள் இலவசமாக வழங்கட்டது.
- அத்திட்டத்தின் புதிய அம்சமாக பாலூட்டும் தாய்மார்களுக்கு போது இடங்களான பேருந்து நிலையம், இரயில் நிலையம், திருக்கோயில்களில் பாலுட்டும் அறைகளை உருவாக்கி ஜெயலலிதா உயிர்நாடி திட்டமாக செயல்படுத்தினார்.
- கடந்த ஆட்சி காலத்தில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் (LED Light) குறைந்த அளவு மின்சார பயன்பாட்டில் ஒளிரும் எல்இடி விளக்கு முறையை அம்மா மின்விளக்கு எனப்பெயரில் அறிமுகப்படுத்தினார். பின்பு அதை தெருவிளக்காகவும் அரசாங்கம் சார்பில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தமிழக முழுவதும் மின்சார பயனிட்டை சிக்கனம் செய்யும் விதமாக மின்சார துறையிலும் சாதனை படைத்தார்.
- தமிழ்நாட்டில் விவசாய மக்களுக்கு அரசு மானியங்கள் உதவியால் விவசாய பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் விவசாய வேலைகளுக்கு அவசியமாக தேவைப்படும் நீர் வரத்துக்கு மோட்டார்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. விவசாயிகளின் வீட்டில் கால்நடை வளர்ப்பிற்காக ஆடு, கரவை பசுமாடு, கோழி, மீன் போன்றவை வழங்கி வருமானத்திற்கு வழிவகுக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஜெயலலிதா வழங்கினார்.
- மானிய விலையில் மக்கள் பயன் அடையும் வகையில் அரசு சிமெண்ட் என்று குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் என்று பெயரில் விற்க்கபட்டது.
- குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் மேல்த்தட்டு உயர்பான்மை மக்கள் முதல் கீழ்த்தட்டு சிறுபான்மை மக்கள் வரை அனைவருக்கும் அறிவித்த பல திட்டங்கள் பலன் அடைந்தனர்.
- கடந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் விவசாய வளத்திற்கு எதிரான மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஓ. என். ஜி. சி எண்ணெய் குழாய்கள் போன்ற திட்டங்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டு மண் வளத்தையும், விவசாயத்தையும், இயற்கை வளம் சார்ந்த காடு, மலை போன்ற தமிழ்நாட்டின் உயிர்நாடி இயற்கை ஆதாரங்களை அழிக்கும் சக்திகளை செயல்படுத்தவிடாமல் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தடை விதித்தார்.
- திமுக ஆட்சியில் வாரிசு அரசியலை பயன்படுத்தி கொண்டு அப்போதைய துணை முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் அவர்கள் நிலங்களை கையகப்படுத்தி கொண்டு ரியல் எஸ்டேட் எனப்படும். வரைமுறையற்ற நில அபகரிப்பு முறைகேடான தொழிலால் பல நில உரிமையாளர்கள் கொலை மற்றும் நில மோசடிகளை தடுப்பதற்கு ஜெயலலிதா கடந்த ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு உச்சவரம்பு சட்டத்தால் அம்மோசடி தொழிலை ஒழித்தார்.
- முந்தைய திமுக ஆட்சி காலத்தில் அதன் கூட்டணி கட்சியான மத்திய காங்கிரஸ் கொண்டு வந்த மருத்துவ கல்வி பயிலும் மாணவர்களுக்கு பெரும் தடையாக இருந்த நீட் நுழைவு தேர்வை தமிழகத்தில் நுழைய விடாமல் போராடி நீதிமன்றத்தின் தீர்ப்பால் தடை செய்தார். முதல்வர் ஜெயலலிதா இதனால் மருத்துவ மாணவர்கள் இடையேவும், சிறுபான்மை மக்களிடையேவும், எதிர்கட்சி தலைவர்களாலும் மிகவும் பாராட்டபற்றார்.
- மேலும் இக்காலகட்டத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கும் தேவையான பல திட்டங்களையும், உதவிகளையும் செய்து ஜெயலலிதா சிறுபான்மையினரின் தோழியாக மாறினார். இதனால் அந்த ஏழை மக்களால் ஜெயலலிதா பெண் எம். ஜி. ஆர் என்று பாராட்டு பெற்றார்.
- தமிழுக்கும் தமிழ் வழி கல்விக்கும் கடந்த திமுக ஆட்சியில் மு. கருணாநிதி அவர்களது சமச்சீர் கல்வி முறையை கடைபிடித்தார்.
- ஜெயலலிதா அவர்கள் கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு கூறிய அனைத்து வாக்குறுதி திட்டங்களான சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற பிரச்சாரத்தில் கூறிய வாக்குறுதிகளை 99% சதவீதம் நிறைவேற்றினார்.
- மேலும் இந்திய சினிமா நூற்றாண்டு விழா ஜெயலலிதாவின் தலைமையில் 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு அனைத்து இந்திய திரையுலகை சார்ந்த நடிகர்/நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது.
- அதனால் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே அதிமுக போட்டியிட்டு தமிழகத்தில் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இக்கட்சி நிறுவனர் ஆன எம். ஜி. ஆர் முதல்வராக இருந்த போது மத்திய, மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் வரலாற்றை முறியடிக்கும். விதமாக ஜெயலலிதா அவர்கள் எந்த ஒரு கட்சி உடனும் கூட்டணியில்லாமல் வெற்றி பெற்று தனிப்பெரும் மாநில சுயாட்சி தன்மையுடனும், திராவிட சக்தியாகவே அதிமுகவை விளங்கவைத்தார்.
- இதனால் மத்தியில் வென்று ஆட்சியை பிடித்த பாஜகவில் நரேந்திர மோடி பிரதமர் ஆனதை எதிர்த்து சவாலாக மோடியா லேடியா என்று ஜெயலலிதா அவர்கள் இந்தியாவின் நலனில் காவி மதவாத தீய சக்திக்கு எதிராக சாட்டையை சுழற்றினார்.
- இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2013 ஆண்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலின் போது இலங்கையில் நடந்தேறிய இலங்கைத் தமிழர் இனப்படுகொலையில் ஈழதமிழற்களையும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொன்ற இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்த்து ஐநாவில் கொண்டு வரும் தீர்மானத்தை வரவேற்று தமிழகத்தில் பெரும் மாநாட்டை நடத்தினார்.
- இதனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பலமான வெற்றி பெற்றது.
- 2014 ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்திற்கு இனக்கமாக ஜெயலலிதா செயல்படாமல். அவர் தமிழகத்தில் மாநில சுயாட்சி தத்துவத்தோடு செயல்பட்டதை எதிர்த்தும் மத்திய பாஜக அரசின் திட்டங்களை தமிழகத்தில் நுழைய விடாமல் எதிராக செயல்பட்டதால் ஜெயலலிதா மேல் உள்ள பழைய குற்ற வழக்கான சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று தனது முதல்வர் பதவியில் இருந்து விலகி ஜெயலலிதா சிறை சென்றது மத்திய பாஜக மோடியின் அழுத்ததால் தான் என்று தமிழகத்தில் பொது மக்களிடம் பலமான எதிர்ப்புகள் மோடியை நோக்கி இருந்தபோதிலும். மீண்டும் ஒரே வருடத்திற்க்குள் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு சிறையில் இருந்து வெளிவந்து மக்களின் பேராதரவுடன் சென்னை ஆர். கே. நகர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தி போட்டியிட்டு வென்று மக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
- உலக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக பல வர்த்தகங்கள் தமிழகத்தில் ஜெயலலிதாவின் இந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு உலக பொருளாதார வளர்ச்சி மாநாட்டை நடத்தினார்.
- 2015 ஆம் ஆண்டு சென்னையில் அதிக மழையால் நிகழ்ந்த வெல்ல அபாயத்தால் மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு ஆளான நிலையில் அரசியல் தலைவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்ததை அடுத்து அச்சமயத்தில் எதிர்கட்சியான திமுகவின் கை மிகவும் ஓங்கி இருந்தாலும் அதிமுக தலைமையில் மக்களுக்கு பெரும் நிவாரண பணிகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட சேதாரத்தை பொறுத்து நிவாரண நிதி வழங்கப்பட்டது. சென்னை மட்டும் இல்லாது வெல்லத்தால் பாதிக்கப்பட்ட பல தமிழக மாநிலங்களிலும் அம்மையார் ஜெயலலிதா இழப்பீடு நீதி சென்றடைந்து மக்கள் பயன் அடைந்தனர்.
- மேலும் கடந்த 2004 முதல் 2016 தேர்தல் வரை ஜெயலலிதா அவர்கள் மத்தியில் எந்த கட்சியுடனும் கூட்டணி தேவையில்லை மத்திய அரசுடனான கூட்டாட்சி முறையை தவிர்த்து விட்டு மாநில சுயாட்சி கொள்கை முறையே சிறந்தது. அது தான் தமிழக மக்களுக்கும் சிறந்தது என்று அவர் எடுத்த அந்த முடிவை இத்தேர்தல் வரை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்காமல் அதிமுகவை திராவிடகட்சியின் சுயமரியாதை சின்னமாக விளங்க வைத்தார்.
- அதனால் 2016 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா கடந்த ஆட்சி காலத்தில் அவர் மக்களிடையே அவர் செய்த பல உதவிகளும் நன்மையான திட்டங்களினால் பலன் அடைந்ததால். அவர் இடைக்காலத்தில் சிறை சென்ற நிகழ்வையும் தாண்டி மக்களின் பேராதரவு ஜெயலலிதாவின் பக்கமே இருந்தது
- மேலும் இத்தேர்தலில் ஜெயலலிதா தனது மேல் உள்ள சொத்து குவிப்பு வழக்குகளை நீக்குவதற்கு மத்திய பாஜக-அதிமுக கூட்டணி ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசபட்டபோது. அதற்கு பேரடியாக தேர்தல் பிரச்சார களத்தில் ஜெயலலிதா ஊழல் தவறு செய்தேன் என்றால் நான் சிறை செல்வேன். நான் குற்றவாளியா ! இல்லையா ? என்று எனது தமிழக மக்களின் மனதிற்கு தெறியும் அதற்கு மத்தியில் எந்த கட்சியுடனும் ஒரு போதும் நான் இருக்கும் வரை கூட்டணி சமரசம் கிடையாது. என்று கூறிக்கொண்டு எனக்கு மத்திய கட்சிகளுடனும் கூட்டணி தேவையில்லை. மாநில கட்சிகளுடனும் கூட்டணி தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றும் கட்சியான அதிமுகவுக்கு தமிழக மக்கள்கள் ஒருவரே கூட்டணி, வெற்றி பெரும்பான்மை என்று தேர்தல் பிரச்சார களத்தில் பேசியது. மக்களிடையே ஏற்பட்ட நம்பிக்கை உணர்வால் தொடர் வெற்றி பெற வைத்து ஜெயலலிதா ஆறாவது முறையாக ஆடம்பரமில்லாமல் மக்களின் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார்.
Remove ads
கூட்டணி அமைப்பதற்கான முன்னெடுப்புகள்
- தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படாத நிலையிலேயே கட்சிகள் கூட்டணி குறித்த முன்னெடுப்புகளை டிசம்பர் 2015 இறுதிவாக்கில் எடுக்கத் தொடங்கின.
அதிமுக
- பொருத்தமான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்தார்[9].
திமுக
- திமுகவுடன் இத்தேர்தலில் எந்த பெரிய கட்சிகளும் கூட்டணியில் இணையாததால். சிறிய கட்சிகளுடன் தேர்தலை சந்தித்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் தேமுதிக தனது கூட்டணியில் இணையுமாறு சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூறியபோது அக்கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால். இம்முறை திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் தனது முரசொலி பத்திரிகையில் கருணை மனம் கொண்ட கருமை நிற பொன்மனச்செம்மலே வருக வருக என்று தலையங்கத்தின் மூலம் விஜயகாந்தை மறைமுகமாக தனது கூட்டணிக்கு அழைப்பு விடுத்த போதிலும் தமிழக பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியசாமி தலையீட்டால் திமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் விஜயகாந்த் அவர்களது தேமுதிக கூட்டணி உடன்பாடு ஏற்படும் நிலையில் பாஜகவிற்கு 21 தொகுதிகளும், தேமுதிகவிற்கு 20 தொகுதிகளும் கூட்டணி உடன்பாடு ஆன போதிலும் சில திமுக தலைவர்கள் பாஜகவுடன் திமுக கூட்டணி சேர்ந்தால் கடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வரவேண்டிய சிறுபான்மையினர் (தலீத்) மற்றும் இஸ்லாமியர்கள் ஓட்டு சிதறி தோல்வியடையும் என்ற கள சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அதே போல் தேமுதிகவிற்கு குறைவான தொகுதிகளை வழங்கியதாலும் சுப்ரமணியசாமியின் இக்கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
- பின்பு திமுக சிறிய கட்சிகளுடன் தனித்து போட்டியிடும் என்று மு. கருணாநிதி அறிவித்த சில நாட்களிலே கடந்த காலத்தில் கூட்டணியில் இருந்து பிரிந்த காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது முந்தைய தேர்தல்களில் திமுக–காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகளை கொடுத்ததால் திமுக அறுதிபெருபான்மை இல்லாமலும், சென்ற சட்டமன்ற தேர்தலில் அளவுக்கு அதிகமான தொகுதிகளை காங்கிரஸ்க்கு கொடுத்ததாலும் தோல்வி அடைந்ததையடுத்து இம்முறை 20 தொகுதிகளே ஒதுக்கப்படும் என்று மு. கருணாநிதி அவர்கள் கூறினார். ஆனால் இதை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏற்று கொள்ளாததால் கடந்த சுப்ரமணியசாமியின் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது பாஜக+21, தேமுதிக+20 மொத்தம் 41 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தி வாங்கினர்.
தேமுதிக
- தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, பாஜக போன்ற கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியும் பெரிதும் முயற்சி செய்துவந்த நிலையில் தனது கட்சி தனித்துப் போட்டியிடுமென கட்சித் தலைவர் விஜயகாந்த் மார்ச் 10 அன்று அறிவித்தார்[10].
- எனினும் தேமுதிக சிறிது நாட்களில் மக்கள் நலக் கூட்டணியின் சிறப்பம்சமான கொள்கைகளை ஏற்றுக் கொண்டு மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்து தேர்தல் உடன்படிக்கை கொண்டு அக்கூட்டணி கட்சி தலைவர்களின் ஏகோபித்த ஆதரவால் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக நின்றார்.
மக்கள் நலக் கூட்டணி
- வைகோ அவர்களின் மதிமுக தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டனர். பின்பு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கௌரவபடுத்தினர். பின்னர் ஜி. கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசும் இக்கூட்டணியில் இணைந்தது.
- வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி பலமான கூட்டணியாக அமைந்தது. இக்கூட்டணியில் இருக்கும் கட்சிகளும், பொதுவாக திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெரும் பெரியகட்சிகளான இரண்டு இடதுசாரி கட்சிகளும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஊழல் மிகுந்த கட்சி என்று கூறி மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தனர்.
பாஜக
- தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது. ஆனால் அம்முயற்சி தோல்வி அடைந்தது.[11].
பாமக
- திமுக, அதிமுக தவிர, தங்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் எக்கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக இக்கட்சியின் தலைவர் ராமதாஸ் அறிவித்தார்.
- பின்னர் எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து போட்டியிட்டது.
- இத்தேர்தலில் அதிமுக, நாம் தமிழர் கட்சிகளைப் போல தனித்துப் போட்டியிட்டு பாமக 5.3 விழுக்காடு ஓட்டைப் பெற்று அதிமுக, திமுகவுக்கு அடுத்த மூன்றாவது தனித்த கட்சியாக இடம்பிடித்தது.
Remove ads
இறுதிவடிவம் பெற்ற கூட்டணிகள்
திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்:
- திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுமென காங்கிரசின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் பிப்ரவரி 13 அன்று அறிவித்தார்[12]. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பெயர்களையும் திமுக அறிவித்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 4 தனி தொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது.[13]
- திமுக கூட்டணியில் இடம்பெற்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுமென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. எம். காதர் மொகிதீன் பிப்ரவரி 15 அன்று தெரிவித்தார்[14].விழுப்புரம், பூம்புகார், கடையநல்லூர், வாணியம்பாடி, மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்[15]
- திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மார்ச் 19 அன்று அறிவித்தார்[16]. இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உளுந்தூர் பேட்டை தொகுதியை மீண்டும் திமுகவுக்கே கொடுத்துள்ளது. நாகை, இராமநாதபுரம், ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது[17]
- திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) இணைந்து போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெஹக்லான் பாகவி மார்ச் 19 அன்று கூறினார்[18]. பின்னர் ஏப்ரல் 7 அன்று திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்த நிலையில் கசப்பு காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் தெகலான் பாகவி அறிவித்தார்.[19]
- பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன், விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன் குமார்,சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி ஆகியோர் மார்ச் 29, 2016 அன்று திமுக கூட்டணியில் இடம் பெற்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார்.[20].[21].
- இத்தேர்தலில் தேமுதிகவில் இருந்து பிரிந்து வந்த மக்கள் தேமுதிக கட்சிக்கு மூன்று தொகுதிகள் (ஈரோடு கிழக்கு , மேட்டூர் , கும்மிடிப்பூண்டி) ஒதுக்கப்பட்டுள்ளன [22]
- திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த அமைப்புகள்: தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிற் சங்க சம்மேளனம் (தமிழ் மாநிலக் குழு), பாரதிய பழங்குடியினர் மக்கள் நலச் சங்கம், அகில இந்தியா பழந்தமிழர் மக்கள் கட்சி, நமது கொங்கு முன்னேற்ற கழகம், தமிழ்நாடு அனைத்து மருத்துவர் சமூக நலச் சங்கம், தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்கள் உரிமை பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி விசைப்பம்பு மற்றும் கூடுதல் விசைப் பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மாநில சங்கம், ஜீவா கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக தர்ஹாக்கள் பேரவை, தலித் பாதுகாப்பு பேரவை, தமிழர் நீதிக்கட்சி, இந்திய குடியரசு கட்சி (ராமதாஸ் அத்வாலே), சிறுபான்மை சமூக புரட்சி இயக்கம், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு, காமராஜர் பசுமை பாரதம், அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், ஆதி ஆந்திரா நற்பணி மன்றம், தமிழ்மாநில திராவிட முன்னேற்ற கழகம், கர்நாடக மாநில தெலுங்கு தேசம் பார்ட்டி, உழைப்பாளர் மக்கள் கழகம், முக்குலத்தோர் மக்கள் கட்சி, திராவிட தேசம் கட்சி, வன்னியர் கிறிஸ்தவர் பேரவை, தமிழ்நாடு பாரதிய ரிபப்ளிகன் பார்ட்டி, அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், தமிழ்நாடு யாதவர் சங்கம், பழங்குடியினர் வெற்றிச் சங்கம், சமாஜ்வாடி பார்ட்டி, தமிழ்நாடு, சமூக மக்கள் கட்சி, கிறிஸ்தவ மக்கள் கழகம், தமிழ்நாடு போயர் சேவா சமாஜம், எம்ஜிஆர் மக்கள் கட்சி, தமிழ்நாடு கன்னட சமுதாயம், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு அனைத்து சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு, நாடாளும் தெலுங்கு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன[23][24]. சிறிதர் வாண்டையார் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகம், திமுகவுக்கு ஆதரவு [25]
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள்:[26]
- அதிமுக கூட்டணியில் தொகுதி கிடைக்காததால் அதில் இருந்து மூவேந்தர் முன்னணி கழகம் விலகியது.[27]
- தொகுதி உடன்பாடு எட்டப்படாததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏப்ரல் 10 அன்று கூட்டணியிலிருந்து விலகியது[28].
- கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரே சின்னத்தில் (இரட்டையிலை) போட்டியிட்டன.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி
இடம்பெற்ற கட்சிகள்:
பாஜக கூட்டணி
இடம்பெற்ற கட்சிகள்:
கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்
- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல் பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம்
- பாமக வேட்பாளர் பட்டியல் பரணிடப்பட்டது 2016-05-09 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய சமூக ஜனநாயகக் கட்சி(எஸ்.டி.பி.ஐ கட்சி)
- தமிழக வாழ்வுரிமைக் கட்சி[28].
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி[32].
- பகுஜன் சமாஜ் கட்சி ( BSP)
Remove ads
தொகுதிப் பங்கீடு / கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை
கூட்டணி
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்
Remove ads
கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்
Remove ads
தொகுதிகளில் கூட்டணிகள் / கட்சிகளின் போட்டி விவரம்
முக்கியக் கட்சிகளுக்கு இடையே இருந்த நேரடிப் போட்டிகள் குறித்த விவரம்
கட்சிகளின் தேர்தல் பரப்புரை
கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்
கட்சிகளின் தேர்தல் முடிவுகள்
- ஆளும் அதிமுக கட்சியில் ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் செய்த மக்களுக்கு தேவையான பயனுள்ள திட்டங்களால் பெரும் வரவேற்பை பெற்றதால் தமிழக மக்கள் செல்வாக்கால் மீண்டும் அதிமுக தொடர் ஆட்சி தொடர் வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
- மேலும் அதிமுக பல வருடங்களாக மத்திய கட்சிகளின் கூட்டணியில்லாமல் தேர்தலை சந்தித்ததை போல் இத்தேர்தலில் தமிழகத்தில் எந்த ஒரு உள்நாட்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லாமல் சிறிய கட்சிகளுடனும், இஸ்லாமிய சிறுபான்மை கட்சிகளுடனும் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார்.
- திமுகவில் அதற்கு முந்தைய ஆட்சி காலமான (2006-2011) மு. கருணாநிதி முதலமைச்சர் ஆக இருந்த போது பல ஊழல் முறைகேடுகள், அக்கட்சியின் அமைச்சர்கள் செய்த வன்முறை செயல்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நடந்தேறிய ஈழதமிழர் இனப்படுகொலை, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்குகள் போன்ற முறைகேடான ஊழல் மிக்க கட்சி என்பதால் தமிழக மக்கள் திமுகவை ஆதரிக்கவில்லை, மேலும் இத்தேர்தலிலும் திமுக-காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகளை கொடுத்தாலும் தமிழக மக்கள் காங்கிரஸ் மீதான அதிருப்தியால் கூட்டணி தலைமை கட்சியான திமுகவை ஆதரிக்காமல் தோல்வி அடைய செய்தனர்.
- மேலும் இத்தேர்தலில் மூன்றாவது அணியாக பலம் பொருந்திய கட்சி கூட்டணியாக வைகோ அவர்கள் திமுக, அதிமுக என்கிற ஊழல் மிக்க திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் மதிமுக தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணியில் பல தமிழக உள்நாட்டு கட்சிகளான திருமாவளவன் அவர்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற பெரும் கட்சிகளின் மாற்று ஆட்சி கூட்டணியை கண்டு விஜயகாந்த் அவர்களின் தேமுதிக, ஜி. கே. வாசன் அவர்களின் தமாகா இணைந்து பெரிய கூட்டணியாக உருவானது. அதில் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அவர்களை கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஒரு மனதாக ஒப்பு கொண்டு விஜயகாந்த் மாற்றத்துக்கு உண்டான முதலமைச்சர் ஆக வரவேண்டும் என்று ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் தேர்தல் முடிவுகளில் விஜயகாந்த் உட்பட அக்கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பெரும் தோல்வியடைந்தனர்.
- முந்தைய தேர்தல்களில் பாமக தலைவர் ச. இராமதாசு அவர்கள் திமுக அல்லது அதிமுக கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதை தவிர்த்து விட்டு இம்முறை தனது மகன் அன்புமணி ராமதாஸ் அவர்களை தனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து 1996 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எந்த ஒரு பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் ஈடுபடாமல் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிட்டது. அதில் முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ் என்று துவங்கிய பிரச்சார முழக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்றாலும் தேர்தலில் பாமக ஒரு இனவாத கட்சி என்று மக்கள் ஆதரிக்காமல் புறம் தள்ளியாதால் பெரும் தோல்வி அடைந்தது.
- மத்திய பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் பச்சமுத்து பாரிவேந்தர் அவர்களின் இந்திய ஜனநாயக கட்சி மட்டும் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட போதிலும் தமிழகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பிரச்சாரத்தில் மத்திய பாஜக அரசாங்கத்தையும் பிரதமர் மோடியை எதிர்த்து நான் தமிழக முதல்வராக இருக்கும் வரை தமிழ்நாட்டில் காவியையும் நுழைய விடமாட்டேன் காவி அணிந்த பாவிகளையும் நுழைய விடமாட்டேன் என்று உருக்கமாக பேசியது மோடி எதிர்ப்பு அலையால் தமிழக மக்கள் பாஜக ஒரு மதவாத கட்சி என்று மக்கள் புறம் தள்ளியாதால் பெரும் தோல்வியடைந்தது.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலே ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டுக்களை வாங்கியது என்றாலும் தலைவர் சீமான் அவர்கள் எந்த ஒரு மத்திய, மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்ற கூட்டணி கொள்கையை முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சீமானை பாராட்டினார். அதை என் அதிமுக கட்சியிலும் எக்கட்சியுடனும் கூட்டணி இல்லை. என்ற கொள்கை தத்துவத்தை பாராட்டி தனது அதிமுகவும் தோழர் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சியும் எக்கட்சியுடனும் கூட்டணி இல்லை என்ற முறையில் ஒற்றை கருத்துடைய கட்சிகள் என்று ஜெயலலிதா அவர்கள் பெருமைபடுத்தினார்.
வேட்புமனு தாக்கல், இறுதிப் பட்டியல்
- 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் வங்கி விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.[120]
- 25 ஏப்ரல் 2016 - திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.[121]
- 28 ஏப்ரல் 2016 - 226 அதிமுக வேட்பாளர்களும் அதன் 7 கூட்டணி வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்தனர்[122][123][124]
- பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.[125]
கருத்துக் கணிப்புகள்
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்
- 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பு கூறியது.[126]
- திமுகவை விட அதிமுக சற்று முன்னணியில் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி பிப்ரவரி 15 அன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தெரிவித்தது[127][128].
தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்
வாக்குப்பதிவு
- அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல், மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- 232 தொகுதிகளுக்கான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சராசரி = 74.26%
வாக்கு எண்ணிக்கை பணி
- 68 நடுவங்களில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டது. இதற்கு அரை மணிநேரம் கழித்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.
முடிவுகள்
234 சட்டமன்ற தொகுதியில், 227 தொகுதியில் போட்டியிட்டு 134 தொகுதியில் வென்று ஆளும் அதிமுக கட்சியே மீண்டும் வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவி செல்வி ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads