இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
Remove ads

இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. து. ராஜா 21 சூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா. முத்தரசன் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார்.

விரைவான உண்மைகள் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி Communist Party of India, சுருக்கக்குறி ...
Remove ads

கட்சியில் பிளவு

1962-இல் நடைபெற்ற இந்தியச் சீனப் போரின் காரணமாக கட்சித் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. எஸ். ஏ. டாங்கே தலைமையிலான தலைவர்கள் சோவியத் ஒன்றியம் மற்றும் இந்தியாவை ஆதரித்தனர். சில தலைவர்கள் சீனாவை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் 1964-இல் புதிய மார்க்சிஸ்டு கட்சியை நிறுவினர்.[6] ஆயினும் கொள்கை கோட்பாடுகள் ஒன்றே கொண்டிருந்தபோதிலும் ஏன் இடது வலது என பிரிந்த காரணம் ஏனென்று தெரியவில்லை.

Remove ads

ஆரம்ப கால வரலாறு

ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த எம். என். ராய் போன்ற அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, பழைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த தாஷ்கண்ட் நகரத்தில், இந்தியப் பொதுவுடமைக் கட்சியைத் தெடங்கினார்கள்.[7]

1925 களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட மும்பை, வங்காளம், பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாநிலங்களில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (AITUC) மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த கர்னி-காம்கார் ஒன்றியம் மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர்.

Remove ads

ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை

அப்போது இந்தியாவில் ஆங்கிலேய காலனிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர்.

1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கான்பூர், மீரட் போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். இட்லரை [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] ஆங்கிலேயருக்கு ஆதரவாக தாக்கிய போது ஆங்கிலேயர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாக இருக்க ஆரம்பித்தார்கள்.

காங்கிரசுடன் உறவு

  • கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்ட்கள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள்.
  • ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் கம்னியூஸ்ட் கட்சிகள் ஆயூதம் ஏந்திய போராட்டமுறையில் ஆட்சி அமைப்பதை காரணம் காட்டி அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த இந்திய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தடை செய்யப்பட்டது.
  • பின்பு இதற்கிடையே ஏற்பட்ட சர்வதேச இடதுசாரி கம்யூனிஸ்ட்களின் தலைமையிடமான (பொலிட்பீரோ) தலையீட்டால் இந்தியாவில் கம்னியூஸ்ட் கட்சி தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்று பிரதமர் நேரு தடையை 1952 நீக்கினார்.
  • பின்பு 1952 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நேரடியாக தேர்தல் அரசியலில் கம்னியூஸ்ட் கட்சி செயல்பட ஆரம்பித்தது.
  • இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கை சித்தாந்தம் உடைய பலமான எதிர்கட்சியாக கம்னியூஸ்ட் கட்சி செயல்பட்டு வந்தது.
  • பிறகு 1969 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிளவுற்ற போது இந்திரா காங்கிரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தது.
  • பின்பு காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆதரவு என்ற நிலையை கம்யூனிஸ்ட் கட்சி எடுத்ததாலே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து வெற்றி பெற்று இந்தியாவை ஆளும் ஒன்றிய அரசில் ஆட்சி அமைக்க முடியாத நிலையும், அக்கட்சியின் தனித்தன்மையும் இழந்ததாக கூறப்படுகிறது.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads