மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை என்பது தமிழ்நாடு மாநில அரசின் துறைகளில் ஒன்றாகும். மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கபூர்வமான பங்கினை அளிக்க இயலும். பல்வேறு முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. நல்ல பொது சுகாதாரத்தை பராமரிப்பதில் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு மாநிலம் முன்மாதிரி மாநிலமாக விரைந்து முன்னேறி வருகிறது.
Remove ads
துறை செயல்பாடுகள்
தமிழ்நாட்டு மக்களின் உடல்நலம் காக்கும் பொருட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஏராளமான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை கொண்டுள்ளது மற்ற உலக நாடுகளுக்கு இணையான சுகாதாரத்துறை முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே இந்தத் துறையின் இந்தத் துறையின் குறிக்கோளாகும்.[1] மேன்மையான மருத்துவக்கல்வி அதன்மூலம் உன்னதமான நவீன உயர்தர மருத்துவ சிகிச்சை என்ற இரு முக்கியமான கொள்கைகளுடன் இந்த துறை இயங்கி வருகிறது.
மேன்மையான மருத்துவக்கல்வி
தகுதி வாய்ந்த மருத்துவர்களால் தமிழ் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மருத்துவம் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே இந்த கொள்கையின் அடிப்படையாகும். இதன்படி தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 19 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 1500 க்கும் மேற்பட்ட மேற்பட்ட மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர். இத்தகைய மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ உட்கட்டமைப்புகள், நவீன மருத்துவ உபகரணங்கள், நவீன மருத்துவ முறைகள் கற்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுதன் மூலம் தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதே இந்த துறையின் நோக்கமாகும்.
உன்னதமான நவீன உயர்தர மருத்துவ சிகிச்சை
மேற்குறிப்பிட்ட 17 மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை போக 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 16 உள்ளன. இவை அனைத்திலும் நவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மூலம் லட்சக்கணக்கான நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
அதிக உயிரிழப்புக்கு காரணங்களான நீரிழிவு நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அந்த நோய்களுக்கான அனைத்து சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 9 உயர் மருத்துவ சிகிச்சை பிரிவுகளும் 400 படுக்கை வசதியும் கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது.
மருத்துவக் காப்பீடு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைமை மலைகள் , மருந்தகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், இரண்டாம் நிலை மருத்துவமனைகள் என பல்வேறு முறைகளில் நோய் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் நோய் சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டாலும் அதனோடு மருத்துவ செலவுகளை ஏழை எளிய மக்கள் எளிதாக கைக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு மருத்துவ காப்பீடு திட்டமும் செயல்பட்டு வருகிறது.
இவை போக குருதி வங்கி, அறுவை சிகிச்சை , மகப்பேறு மற்றும் மகளிர் நலம், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை , பால்வினை நோயியல், எலும்பு முறிவு, மயக்கவியல், குழந்தை நலம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், அவசரகால ஊர்தி சேவை, ஆய்வுக்கூட சேவை, தொழு நோய், காசநோய், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் தொற்றா நோய் போன்ற சிறப்பு மருத்துவ திட்டங்கள் இந்த மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப துறை மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழுநோய் மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழகம் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. போலியோ ஒழிப்பில் தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. கடந்த 8 வருடங்களில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. இவையாவும் இத்துறையின் சீரிய முயற்சியால் நடந்தவையாகும்.
Remove ads
சார்பு துறைகள்
[2] இவ்வாறாக 17 சார்பு திட்டங்கள் இந்த துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான தமிழ்நாடு மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றும் மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், சர்வதேச சுகாதார நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது.
Remove ads
பொறுப்பேற்றுக்கொண்ட நிறுவனங்கள்
தற்போதைய துறை அமைச்சர்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads