சி. விஜயபாஸ்கர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சி. விஜயபாஸ்கர் (C. Vijayabaskar) (பிறப்பு: ஏப்ரல் 8,1974) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அதிமுக) சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் சுகாதார அமைச்சராகவும் இருந்தார்.[1][2][3] இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதே தொகுதியில் 2011,2016 மற்றும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2001-ல் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விரைவான உண்மைகள் சி. விஜயபாஸ்கர், முன்னாள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சா், தமிழ்நாடு அரசு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சி.விஜயபாஸ்கர் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் ஆர்.சின்னதம்பி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிதம்பரம், இராசா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தனது மருத்துவ கல்வியை முடித்தார்.[4] இவர் ரம்யா என்பவரை மணந்தார். .ந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.[5]

சர்ச்சைகள்

ஏப்ரல் 2017 இல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்பட்டதால், அவரது சக அமைச்சர்களான ஆர். காமராஜ் மற்றும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இருப்பினும் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவை ரத்து செய்யப்பட்டன.[6] இவர் 2018 ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுப் பிரிவின் மேலதிக விசாரணையை எதிர்கொண்டார்.[7]

விஜயபாஸ்கர் ஏப்ரல் 2017 இல் மாநில சுகாதார அமைச்சராக இருந்த போது அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனையில், சென்னையின் ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது தனது கட்சி வேட்பாளரான டி. டி. வி தினகரன் சார்பாக வாக்காளர்களுக்கு தலா 4,000 வீதம் ரூ 89 கோடியை லஞ்சம் கொடுப்பதற்கான நோக்கத்தை வெளிப்படுத்தும் தெளிவான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.[8]

அ. தி. மு. க தலைமையிலான தமிழக அரசில் தனது ஐந்தாண்டு காலப்பகுதியில் சட்டவிரோதமாக 27 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியதாக விஜயபாஸ்கர் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டிவிஏசி) வழக்கு பதிவு செய்தது. அவரது மனைவியையும் இவ்வழக்கில் சேர்க்ப்பட்டுள்ளார். மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சொந்தமானதாகக் கூறப்படும் பல்வேறு இடங்களில் 2021 அக்டோபர் 18 அன்று மேலும் சோதனைகள் நடத்தப்பட்டன.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads