மங்கலம்பேட்டை
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மங்கலம்பேட்டை (ஆங்கிலம்:Mangalampet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் வட்டடத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
விருத்தாச்சலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்துள்ள இப்பேரூராட்சி, விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. மாவட்டத் தலைமையிடமான கடலூரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 5 கி.மீ. தொலைவில் உள்ள பூவனூரில் உள்ளது. இதன் கிழக்கில் நெய்வேலி 30 கி.மீ.; மேற்கில் கள்ளக்குறிச்சி 30 கி.மீ.; வடக்கில் உளுந்தூர்பேட்டை 5 கி.மீ. மற்றும் தெற்கில் விருத்தாச்சலம் 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
Remove ads
பேரூராட்சியின் அமைப்பு
1.21 ச.கி.மீ. பரப்பும் , 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 90 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,108 வீடுகளும், 9,278 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.30% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 829 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
சிறப்புகள்
இங்கு இரண்டு மசூதிகள் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருக்கின்றன. மேலும் கோவிலானூர் மற்றும் கோணாங்குப்பம் ஆகிய அருகில் உள்ள கிராமங்களில் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்களும் இருக்கின்றன. ஊரின் எல்லையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மங்கல நாயகி அம்மன் கோவிலும், ஊரினுள் சிவன், விநாயகர் ம்ற்றும் சுப்பிரமணியர் திருக்கோவில்களும் உள்ளன
அருகில் உள்ள விவசாயம் சார்ந்த கிராமங்களின் பொருளாதார மற்றும் வர்த்தக மையமாக இருப்பதினால் அதைச் சார்ந்த தொழில்கள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன. முன் காலங்களில் துணிகள் நெசவும் சிறப்பாகச் செய்யபட்டு வந்தன. தற்பொழுது மிகச் சிறிய அளவில் மட்டும் நெசவுத் தொழில் செய்யப்பட்டு வருகின்றது.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads