வளமடல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வளமடல் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும்.[1][2] சில பாட்டியல் நூல்கள் இதற்கு மடல் என்றே பெயர் குறிப்பிடுகின்றன.[3] இச்சொல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்தலைக் குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியாத ஒருவன் அப்பெண்னை அடைவதற்காக ஊராரின் ஆதரவை வேண்டிப் பனை மடலால் குதிரை வடிவம் செய்து அதன் மீது ஏறி ஊரில் உலா வருவதே மடலூர்தல் எனப்படுகிறது.தமிழில் ஆடவரே மடலேறுவதாக அச்சுறுத்துவதும் மடலேறுவதும் உண்டு. மகளிர்க்கு அது மரபன்று. ஆயினும் தம்மைத் தலைவியாக பாவித்து பாடும் திருமங்கை ஆழ்வார் மடற்கூற்று மகளிரிடமும் அமையலாம் என இறைவன்மீது கொண்ட காதல் புலப்படப் பாடுகிறார். அறம், பொருள், வீடு ஆகியவற்றை இகழ்ந்து, காம இன்பமே சிறப்பு என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியமே வளமடல் ஆகும். இது தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெண்பாவில் அமையும். பாட்டுடைத் தலைவனின் பெயருக்கு ஏற்ற எதுகை வைத்துத் தலைவன் மடலேறுவதாகக் கூறி ஈரடி எதுகை வரப் பாடுவது வளமடலுக்குரிய இலக்கணம் ஆகும்.

Remove ads

மடல் நூல்கள்

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads