மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி, இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி அரண்மனையில் அமைந்துள்ளது. இது எர்ணாகுளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை கீழைத்தேசச் செல்வாக்குடன் கூடிய போத்துக்கேயக் கட்டிடக்கலைப் பாணியிலான மிகப் பழைய எடுத்துக்காட்டுக்களுள் ஒன்று. இதனால் இது வரலாற்று நோக்கிலும், கட்டிடக்கலை நோக்கிலும் தனித்துவமானது ஆகும்.
அரண்மனைக்கு அருகில் இருந்த கோயிலொன்றைச் சேதப்படுத்தியதற்கான இழப்பீடாகவும், அரசரைச் அமைதிப்படுத்துவதற்குமாக இந்த அரண்மனை 1545 ஆம் ஆண்டளவில் போத்துக்கேயரால் கட்டப்பட்டு கொச்சி அரசரான வீர கேரள வர்மருக்கு அளிக்கப்பட்டது. எனினும், ஒல்லாந்தர் காலத்தில் இந்த அரண்மனை பாரிய திருத்த வேலைகளுக்கு உள்ளானது. இதனால் இது "டச்சு அரண்மனை" என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு மாடிகளைக் கொண்ட, சதுரவடிவிலான இந்தக் கட்டிடத்தில் நீளமானதும், இடவசதி கொண்டதுமான அறைகள் உள்ளன. நடு முற்றத்தில் அரச குடும்பத்தின் குலதெய்வமான பழையனூர் பகவதியின் கோயில் உள்ளது.
அருங்காட்சியகம் இக் கட்டிடத்தின் மேல்மாடியில் மே 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இங்கே கொச்சி அரசர்களின் உருவப்படங்கள், பல்லக்குகள், உடைகள், ஆயுதங்கள், குடைகள், வாள்கள், தபால்தலைகள், நாணயங்கள் போன்ற பலவிதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1864 ஆம் ஆண்டிலிருந்து அரசாண்ட அரசர்களின் ஆளுயர உருவப்படங்கள், பெரிய மண்டபம் ஒன்றில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads