மணிச்சித்ரதாழ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிச்சித்ரதாழ் ஒரு மலையாளத் திரைப்படம். 1993ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் இயக்குநர் ஃபாசில். இதை அவரது உதவியாளர்களாக இருந்த பிரபலமான இயக்குநர்களான சித்திக்-லால், பிரியதர்சன், சிபி மலையில் ஆகியோர் இணைந்து இதை இயக்கினார்கள். மலையாளத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது
கதைச் சுருக்கம்
ஒரு புராதனமான நாயர் குடும்பத்திற்கு விடுமுறைக்கு வந்து தங்கும் ஒரு பெண்ணுக்கு மனச்சிக்கல்கள் உருவாகின்றன. அவள் தன்னை அங்கே உள்ள ஒரு தொன்மத்துடன் அடையாளப்படுத்திக்கொள்கிறாள். அவள் தன்னை நாகவல்லி என்ற தமிழ் நடனமணியாக எண்ணிக்கொள்கிறாள். இந்த இரட்டை ஆளுமைச் சிக்கலை உளவியலாளர் ஒருவர் ஊகித்து அவளை ஒரு நடைமுறைத் தந்திரம் மூலம் குணப்படுத்துகிறார்
கேரளத்தில் ஓர் ஈழவக்குடும்பத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மதுமுட்டம் இந்தக்கதையை எழுதினார்.[1]
Remove ads
கலைஞர்கள்
- மோகன்லால்
- சுரேஷ் கோபி
- நெடுமுடி வேணு
- ஷோபனா
- ருத்ரா
- வினயா
- கதை திரைக்கதை வசனம்: மது முட்டம்
- பின்னணி இசை : ஜான்சன்
- இசை ; எம் ஜி ராதாகிருஷ்ணன்
விருதுகள்
- சிறந்த நடிகைக்கான தேசிய விருது
- சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான மாநில அரசு விருது
- சிறந்த பாடகர் ஜேசுதாஸ் [பழந்தமிழ் பாட்டுணரும்]
மொழியாக்கம்
இந்தப்படம் முறையான அனுமதி பெறப்படாமல் கன்னடத்தில் பி. வாசுவானல் ஆப்தமித்ரா என்ற பேரில் கன்னடத்தில் எடுக்கப்பட்டது. பின்னர் ஆப்தமித்ராவை தமிழில் சந்திரமுகி என்ற பேரில் பி வாசு ரஜனிகாந்தை வைத்து எடுத்தார். அப்போது ஃபாசில் வழக்கு தொடர்ந்தார். மூலத்திற்கும் சந்திரமுகிக்கும் எந்த தொடர்பும் இல்லை, இது வேறு கதை என்று பி.வாசு சொன்னார். ஆனால் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாசிலுக்கு பணம் அளிக்கப்பட்டது. [சான்று தேவை] 2010ல் வாசு தெலுங்கில் “நாகவல்லி” என்ற பெயரில் வெங்கடேஷ், அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் இதே கதையினை எடுத்துள்ளார்.
ஆனால் தன் கதைக்கான பதிப்புரிமை தனக்குத்தான் என்றும், தனக்கு பணம் தேவை என்றும் ஆசிரியர் மது முட்டம் கோரினார். அவருக்கு பணம் அளிக்கப்படவில்லை. வழக்கு நீதிமன்றத்திலேயே இன்றும் (2011) உள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் வசூலித்த இந்தப் படத்தின் ஆசிரியருக்கு வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே ஒட்டுமொத்தமாக அளிக்கப்பட்டது. [சான்று தேவை]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads