பிரியதர்சன்

இந்தியா திரைப்பட இயக்குனர் From Wikipedia, the free encyclopedia

பிரியதர்சன்
Remove ads

பிரியதர்சன் (Priyadarshan), 30 சனவரி 1957, (இயற்பெயர்: பிரியதர்சன் சோமன் நாயர்) தென்னிந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். பாலிவுட்(இந்தி) திரைப்படங்களில் பத்து ஆண்டுகள் (2001-10) கோலோச்சிய பிரியதர்சன், ராங்ரஜ் (2013) தனது இறுதி இந்திப் படமென்றும், மலையாளப் படங்களில் முழுக்கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்தார்.[1]

விரைவான உண்மைகள் பிரியதர்சன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

1957இல் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் முதுகலை மனோதத்துவவியலில் தேர்ச்சி பெற்றார். நூலக மேலாளரின் மகனாகப் பிறந்த இவர், சிறு வயது முதலே புத்தகப் பிரியராகி சில நாடகங்களுக்குத் திரைக்கதையும் எழுதினார். மலையாள இயக்குனரான பி. வேணுவின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு திரைத்துறைக்குப் பயணப்பட்டார்.

இளமைக்காலம் முதலே முக்கிய மலையாள நடிகர்களான மோகன்லால், எம். ஜி. சிறீகுமார், சுரேஷ்குமார், சணல்குமார், ஜகதீஸ், மணியன் பிள்ள ராஜு, மற்றும் அசோக் குமார் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர்களுடன் சென்னை நோக்கி 1980களில் திரைப்பட வாய்ப்புகளுக்காகப் பயணப்பட்டார். நண்பர்களின் உதவியால் 1984ல் பூச்சாக்கொரு மூக்குத்தி(தமிழில்:பூனைக்கொரு மூக்குத்தி) என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் 100 நாட்களைத்தாண்டி கேரளத் திரையுலகில் முத்திரை பதித்தது.

நடிகை லிஸ்ஸியை மணந்தார்.

Remove ads

விருதுகள்

தேசிய விருதுகள்

  • 2012 - பத்மசிறீ விருது
  • 2007 - சிறந்த திரைப்பட விருது - காஞ்சிவரம்

மாநில விருதுகள்

  • 1994 - தென்மாவின் கொம்பத்து - கேரளமாநில சிறந்த மக்கள் பேராதரவுப் படம்
  • 1995 - சிறந்த கேரள மாநிலத்திரைப்படம் இரண்டாமிடம் - காலா பாணி (தமிழில்:சிறைச்சாலையாக வெளியானது).

தொலைக்காட்சி விருதுகள்

ஏசியாநெட் விருது

  • 2008 - ஜூரி விருது - இந்திய சினிமாவில் முக்கியப் பங்களிப்பு

ஜெய்ஹிந்த் டி.வி விருது

  • ஜெய்ஹிந்த் ரஜத் முத்ரா விருது.
Remove ads

திரைப்பங்களிப்பு

மேலதிகத் தகவல்கள் திரைப்படம், ஆண்டு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads