மணிமாறன்
தமிழ் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிமாறன் (Manimaran) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.
தொழில்
இவர் சித்தார்த், புதுமுகம் அஷ்ரிதா செட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த உதயம் என். எச். 4 (2013) என்ற படத்தின் வழியாக தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இது அதே ஆண்டில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. உதயம் என்.எச் 4 படத்தை மீகா என்டர்டெயின்மென்ட் & கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி தயாரித்தது, இதற்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதினார்.[1] மணிமாறன் வேலூருக்கு அருகிலுள்ள வாலாஜாபேட்டையில் பிறந்து வளர்ந்தார். மணிமாறன் இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநராக பணியாற்றியவர். இவர் வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷுடன் 2019 ஆம் ஆண்டு அசுரன் படத்தில் இரண்டாவது அலகு இயக்குநராக இணைந்து பணியாற்றினார்.[2] 2021 இல், சங்கத்தலைவன் படத்தை இயக்கினார். படத்தில் சமுத்திரக்கனிக்கு பொதுவுடமை சட்டையை பெருமையுடன் அணிவித்தார். ஆனால் அதன் அரசியலை கொண்டு சேர்ப்பதில் தவறிவிட்டார்.[3]
Remove ads
திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads