ஆடுகளம் (திரைப்படம்)

வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஆடுகளம் (திரைப்படம்)
Remove ads

ஆடுகளம் (ஒலிப்பு) (ஆங்கிலம்: Aadukalam) (2011) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும், வெற்றிமாறனின் இயக்கத்தில், ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ் , டாப்சி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டிற்கான தேசியத் திரைப்பட விருதுகளில் ஆடுகளத்தின் நாயகன் தனுசிற்கு சிறந்த நடிகர் விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்று தங்கத்தாமரை விருதும், அவருக்கே சிறந்த திரைகதைக்கான விருதும் நடன இயக்குநர் தினேஷ்குமாருக்கு சிறந்த நடன இயக்குநர் விருதும் கிடைத்துள்ளது.[2]

விரைவான உண்மைகள் ஆடுகளம், இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

சேவல் சண்டையினை கதைக்கருவாக உள்ள இத்திரைப்படத்தில் சேவல் சண்டையில் ஜாம்பவனான பேட்டைக்காரனை (ஜெய பாலன்) அவரின் பரம போட்டியாளரான காவல்துறை அதிகாரி ரத்தினசாமி (நரேன்) ஒருமுறையாவது போட்டியில் வீழ்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பேட்டைக்காரனின் நம்பிக்கையான சிஷ்யனான கருப்பு (தனுஷ்) தான் மிகவும் அன்புடன் வளர்க்கும் சேவலை பந்தயத்தில் ரத்தினசாமிக்கு எதிராகக் களம் இறக்குகிறார். ஆனால் அவரின் குருவான பேட்டைக்காரனுக்கு இதில் சற்றும் உடன்பாடில்லை. அவர் அந்தச் சேவல் சண்டையிடத் தகுதியற்றது எனக் கூறி அதனை கொல்லச் சொல்கிறார். ஆனால் குருவின் எதிர்ப்பையும் மீறி களத்தில் இறங்குகிறார். எதிரணியினரின் சூழ்ச்சி ஆட்டத்தையும் மீறி வெற்றி பெற்று பரிசை வெல்கிறார். பரிசு தொகையினை தன் குரு பேட்டைக்காரனிடம் கொடுத்து வைத்திருக்கிறார். கருப்பின் காதலியான ஆங்கிலோ-இந்திய பெண் ஐரீனின் (டாப்ஸீ) தந்தை கருப்பிற்கு தொழில் ஏற்பாடு செய்து தருவதாக கூற, தான் பந்தயத்தில் வென்ற பரிசு தொகையைக் கேட்கிறார் கருப்பு. அப்போது பேட்டைகாரன் தன்னை வழிபறித்து பணத்தை திருடிவிட்டதாகக் கூறுகிறார். அதன் பின் நடக்கும் பரபரப்பான காட்சிகளும் திருப்பு முனைகளும்தான் கதையின் முடிவு.

Remove ads

கதாபாத்திரங்கள்

Remove ads

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

மேலதிகத் தகவல்கள் #, பாடல் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads