மணிலால் காந்தி
மகாத்மா காந்தி குடும்ப உறுப்பினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மணிலால் காந்தி (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) [1][2], மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கஸ்தூரிபாய் காந்தி இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் இராஜ்கோட்டில் பிறந்தார். 1897இல் முதன் முறையாக தென்னாப்பிரிக்கா சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு இந்தியா திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், அருண் காந்தி (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads