ராஜ்கோட்

From Wikipedia, the free encyclopedia

ராஜ்கோட்map
Remove ads

ராஜ்கோட் (Rajkot) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் நான்காவது பெரிய [5][6] நகரமாகும். இது அகமதாபாது, வடோதரா, சூரத்து ஆகிய நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம் ஆகும். இது குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியின் மையத்தில் உள்ளது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் ராஜ்கோட் இந்தியாவின் 35-வது பெரிய பெருநகரப் பகுதியாக உள்ளது.[7] ராஜ்கோட் இந்தியாவின் 6வது தூய்மையான [8][9][10] நகரமாகும், மேலும் இது மார்ச் 2021 நிலவரப்படி உலகின் 7வது வேகமாக வளரும் நகரமாகும். இந்த நகரம் ராஜ்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகவும் உள்ளது. இது மாநிலத் தலைநகர் காந்திநகரில் காந்திநகரில் இருந்து 245 கி.மீ. தொலைவில் அஜி மற்றும் நயாரி ஆறுகளின் கரையில் அமைந்துள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் ராஜ்கோட் பம்பாய் மாநிலத்துடன் இணைவதற்கு முன்பு, சௌராஷ்டிரா மாநிலத்தின் தலைநகராக 15 ஏப்ரல் 1948 முதல் 31 அக்டோபர் 1956 வரை இருந்தது. ராஜ்கோட் 1 மே 1960 அன்று குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் ராஜ்கோட், நாடு ...
Remove ads

வரலாறு

Thumb
இளம் மகாத்மா காந்தி (இடது) மற்றும் அவரது பள்ளி நண்பர் ஷேக் மெஹ்தாப் (வலது) ராஜ்கோட்டில்

ராஜ்கோட் நிறுவப்பட்டது முதல் வெவ்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்துள்ளது. இது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இருந்தது. மகாத்மா காந்தி போன்ற பல ஆளுமைகளின் இருப்பிடமாக ராஜ்கோட் இருந்தது. ராஜ்கோட் வளர்ந்து வரும் கலாச்சார, தொழில்துறை, பொருளாதார நடவடிக்கைகளின் ஒரு மாற்றம் காணும் காலத்தில் உள்ளது. ராஜ்கோட் இந்தியாவின் 26வது பெரிய நகரமாகவும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் 22வது இடத்திலும் உள்ளது.[9]

ராஜ்கோட் 15 ஏப்ரல் 1948 முதல் 31 அக்டோபர் 1956 வரை சவுராஷ்டிரா மாநிலத்தின் தலைநகராக இருந்தது. பின்னர் 1956 நவம்பர் முதல் நாள் அன்று இருமொழி மாநிலமான பம்பாய் மாநிலத்துடன் இணைக்கபட்டது. 1960 மே முதல் நாள் அன்று பம்பாய் மாநிலத்திலிருந்து ராஜ்கோட் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[11]

26 சனவரி 2001 அன்று 7. 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட குஜராத் நிலநடுக்கம் மேற்கு இந்தியாவை அதிகபட்ச தீவிரத்துடன் உலுக்கியது. இதில் 13,805–20,023 பேர் இறந்தனர். 166,800 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் முக்கியமாக மேற்கு குஜராத்தின் கட்ச் பகுதியை பாதித்தது.

Remove ads

நிலவியல்

Thumb
ராஜ்கோட் நகரத்தில் பாயும் அஜி ஆற்றின் வான்வழிப் படம்

ராஜ்கோட் 22.3°N 70.78°E / 22.3; 70.78 இல் அமைந்துள்ளது.[12] இது சராசரியாக 128 மீட்டர் (420 அடி) உயரத்தில் உள்ளது. இந்த நகரம் அஜி ஆறு மற்றும் நயாரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்கள் தவிர பிற சமயங்களில் வறண்டதாகவே இருக்கும். இந்த நகரம் 170.00 கி.மீ. 2 பரப்பளவில் பரவியுள்ளது.[13]

ராஜ்கோட் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரா என்ற பகுதியில் அமைந்துள்ளது. குஜராத்தின் முதன்மையான தொழில்துறை மையங்களில் ஒன்றாக இருப்பதால் ராஜ்கோட்டின் இருப்பிடம் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜ்கோட் கத்தியவார் தீபகற்பம் என்ற பகுதியில் ஒரு மைய இடத்தில் உள்ளது. இந்த நகரம் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராஜ்கோட் நகரம் ராஜ்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாகும். இந்த மாவட்டம் கிழக்கில் பொடாட் மற்றும் வடக்கில் சுரேந்திரநகர், தெற்கில் ஜூனாகத் மற்றும் அம்ரேலி, வடமேற்கில் மோர்பி மற்றும் மேற்கில் ஜாம்நகர் மற்றும் தென்மேற்கில் போர்பந்தர் ஆகிய தாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

காலநிலை

ராஜ்கோட் வெப்பமான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பென் BSh ), மார்ச் நடுப்பகுதியிலிருந்து சூன் நடுப்பகுதி வரை வெப்பமான, வறண்ட கோடைக்காலம் இருக்கும். சூன் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் வரை ஈரமான பருவமழைக் காலம் இருக்கும். இக்காலத்தில் நகரம் சராசரியாக 670 மில்லிமீட்டர் அல்லது 26 அங்குல மழையைப் பெறும். இந்த மழைப்பொழிவு ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் என்றாலும் [14] - உதாரணமாக 1911 மற்றும் 1939 இல் 160 மில்லிமீட்டர்கள் அல்லது 6.3 அங்குலங்கள் குறைவாக விழுந்தது, ஆனால் 1878 இல் 1,300 மில்லிமீட்டர்கள் அல்லது 51 அங்குலங்கள் மற்றும் 1950 ஆம் ஆண்டில் 1,450 மில்லிமீட்டர்கள் அல்லது 57 அங்குலங்கள் அதிகமாக பொழிந்தது.[15] நவம்பர் முதல் பெப்ரவரி வரையிலான மாதங்கள் மிதமான வெப்பநிலையை கொண்டிருக்கும். அப்போது சராசரி வெப்பநிலை சுமார் 20 °C or 68 °F குறைந்த ஈரப்பதத்துடன் இருக்கும்.

ராஜ்கோட் நகரத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று சூறாவளி ஆகும். சூறாவளிகள் பொதுவாக அரபிக்கடலில் மழைக்காலத்திற்குப் பிந்தைய மாதங்களில் ஏற்படும். மே மற்றும் சூன் மாதங்களில் இப்பகுதியில் அதிக மழைப்பொழிவு மற்றும் அதிவேக காற்று வீசுகிறது. இருப்பினும், பருவமழைக்குப் பிந்தைய சூன் மாதத்தில் மழை மற்றும் காற்றின் அளவு குறைவாக இருக்கும். சூன் மற்றும் சூலை மாதங்களில் இடியுடன் கூடிய மழையானது ராஜ்கோட் வானிலையின் மற்றொரு முக்கிய பகுதியாகும். கோடை காலத்தில் வெப்பநிலை 24 மற்றும் 42 °C (75.2 மற்றும் 107.6 °F) வரை இருக்கும். குளிர்கால மாதங்களில், ராஜ்கோட் வெப்பநிலை 10 மற்றும் 22 °C (50.0 மற்றும் 71.6 °F) வரை மாறுபடும் ஆனால் குளிர்காலம் முழுக்க இனிமையானதாக இருக்கும்.[16]

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், ராஜ்காட் விமான நிலையம் (1981–2010, extremes 1952–2012), மாதம் ...
Remove ads

மக்கள்தொகையியல்

2011ஆம் ஆண்டய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ராஜ்கோட்டின் மொத்த மக்கள் தொகை 1,390,640 ஆகும். ராஜ்கோட் நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 82.20%, இது தேசிய சராசரியை விட அதிகம். மக்கள் தொகையில் 52.43% ஆண்களும், 47.47% பெண்களும் உள்ளனர். முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் இந்துக்கள் பெரும்பான்மையினராகவும் உள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் Religions in Rajkot City (2011)[சான்று தேவை] ...
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

கலாச்சாரம்

ராஜ்கோட்டின் மக்கள் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள். ராஜ்கோட்டின் பெண்கள் நகைகளை விரும்புவார்கள். பெரிய தங்கச் சங்கிளிகள், பதக்கங்கள் மற்றும் பிற கனமான தங்க நகைகளை திருமணம் மற்றும் விழாக்களின் போது பொதுவாக அணிவர். காலம் மற்றும் பண்டிகைகளுக்கு ஏற்ப உடை மாறுகிறது. பெண்கள் பொதுவாக குஜராத்தி பாணி புடவை அணிவார்கள். ஆண்கள் குர்தாக்கள் மற்றும் சாதாரண உடைகள் (சட்டைகள் மற்றும் கால்சட்டை) ஆகியவற்றை அணிவர்.

ராஜ்கோட் பன்முக கலாச்சாரம் கொண்டது. குஜராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம், சிந்தி, பெங்காலி, தமிழ், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகள் போசுபவர்களைக் காணலாம். இருப்பினும், குஜராத்தி, இந்தி, உருது, ஆங்கிலம் மட்டுமே நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. ராஜ்கோட் கத்தியவாரின் ஒரு பகுதியாகும். இதன் காரணமாக, ராஜ்கோட் மக்கள் கத்தியவாரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

ராஜ்கோட் என்பது ரங்கிலு ராஜ்கோட் (રંગીલુ રાજકોટ) என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறது, அதாவது "வண்ணமயமான ராஜ்கோட்" என்பது பொருளாகும். ராஜ்கோட் "சித்ரநாகிரி" (ஓவியங்களின் நகரம்) என்றும் அழைக்கப்படுகிறது.[23]

இலக்கியம்

பிரான்ஸ் காஃப்காவின் படைப்புகளை மொழிபெயர்த்தவரும், புகழ்பெற்ற மற்றும் மிகவும் மதிக்கப்படும் அறிஞரான மால்கம் பாஸ்லே ராஜ்கோட்டில் பிறந்தவராவார்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads