மண்டி சமஸ்தானம்

From Wikipedia, the free encyclopedia

மண்டி சமஸ்தானம்
Remove ads

மண்டி சமஸ்தானம் (Mandi State) 1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1941-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மண்டி இராச்சியம் 2950 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 2,32,598 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். மண்டி சமஸ்தானத்திற்கு தெற்கில் பிலாஸ்பூர் சமஸ்தானம் மற்றும் சுகேத் சமஸ்தானம், மேற்கில் காங்கிரா சமஸ்தானம் மற்றும் வடமேற்கில் சம்பா சமஸ்தானம் எல்லைகளாக கொண்டது. இது பஞ்சாப் மாகாண ஆளுநரின் கீழ் செயல்பட்டது

விரைவான உண்மைகள்
Thumb
மண்டி இராச்சிய மன்னர் ஈஸ்வரி சென்
Remove ads

வரலாறு

1527/1534-ஆம் ஆண்டில் அஜ்பார் சென் என்பவர் மண்டி இராச்சியத்தை நிறுவினார். முகலாயப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த மண்டி இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற மண்டி சமஸ்தான மன்னரகள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பஞ்சாப் மாகாணத்தின் பஞ்சாப் அரசுகள் முகமையின் கீழ் செயல்பட்டது.[1] மண்டி இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.[2]

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி மண்டி இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சுகேத் இராச்சியம் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads