மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்
Remove ads

மதுரை நகரில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தென் தமிழகத்தின் கல்வித் தேவைகளை சமாளித்து வருகிறன. மதுரை மாவட்டத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இது தவிர இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் தனது மண்டல மையத்தை மதுரையில் வைத்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள், இரண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகள், ஏழு தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மகளிருக்கான கல்லூரிகளும் அடங்கும். மதுரை மாவட்டத்தில் ஐந்து பெண்கள் கல்லூரிகள் உள்ளன. மதுரையில் பாரம்பரியம் மிக்க பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் சில உள்ளன.

Thumb
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
Remove ads

பல்கலைக்கழகங்கள்

மதுரை மாவட்டத்தில் இரண்டு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இது தவிர இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் தனது மண்டல மையத்தை மதுரையில் வைத்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள், இரண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகள், ஏழு தன்னாட்சி கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மகளிருக்கான கல்லூரிகளும் அடங்கும். மதுரை மாவட்டத்தில் ஐந்து பெண்கள் கல்லூரிகள் உள்ளன. மதுரையில் பாரம்பரியம் மிக்க பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் சில உள்ளன.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்

மதுரையில் மதுரை பல்கலைக்கழகம் என்கிற பெயரில் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகமானது, 1978 ஆம் ஆண்டு, மறைந்த தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் காமராசர் நினைவாக மதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் கீழ் 133 கல்லூரிகள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை

2010 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட போது மதுரையிலும் தனி பல்கலைக்கழகமாக அமைக்கப்பட்டது. இதற்காக மதுரை நகரின் வடக்கே மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலைநேர கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக இடவசதி வழங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், மதுரை (Anna University Regional Campus , Madurai) தமிழகத்தின், மையப்பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகரில் 2010 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆறு கிளைகளில் ஒன்றாக விளங்குகிறது. தென்தமிழ்நாட்டில் உயர்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 36 கல்வி நிறுவனங்களின் 15000 மாணவர்கள் படிக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகம் மதுரை (கீழக்குயில்குடி), ராமநாதபுரம் (புல்லாங்குடி) மற்றும் திண்டுகல்(ரெட்டியார் சத்திரம், மாங்கரைப் பிரிவு)லில் இயங்குகிறது. தவிர, மதுரை, காரைக்குடி நகரங்களில் தன்னாட்சி பெற்ற அரசினர் கல்லூரிகளும் காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் ஆய்வு மையமும் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளன. தற்போது 17 பட்டப்படிப்பு பாடதிட்டங்களையும் 21 பட்டமேற்படிப்பு பாடத்திட்டங்களையும் நடத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக முனைவர். ஆர். முருகேசன் பொறுப்பாற்றி வருகிறார்.

Remove ads

கல்லூரிகள்

Thumb
அமெரிக்கன் கல்லூரி

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுள் சில மதுரையில் அமைந்துள்ளன. இரண்டு கல்லூரிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், சில கல்லூரிகள் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாவும் செயல்பட்டு வருகின்றன.

Thumb
தியாகராஜா பொறியியல் கல்லூரி

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

அரசுக் கல்லூரிகள்

அரசு உதவி பெறும் தன்னாட்சிக் கல்லூரிகள்

Remove ads

இதர தனியார் கல்லூரிகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads