மனிதச் சூழல் மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மனிதச் சூழல் மண்டலம் (Human ecosystem) என்பது, மனித சமுதாயங்களின் சூழலியல் அம்சங்களை ஆய்வு செய்வதற்காக, சூழலியல் மானிடவியலாளராலும், பிற அறிஞர்களாலும் பயன்படுத்தப்படும் சிக்கலான முறைமை ஆகும். இது குறிப்பிட்ட சூழலுடன் தொடர்புடைய பொருளியல், சமூக-அரசியல் அமைப்புகள், உளவியற் காரணிகள், இயற்பியற் காரணிகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

மனிதச் சூழல் மண்டலம் எனும்போது இது ஒரு வீடு போன்ற சிறிய அலகையோ அல்லது பெரிய ஒரு நாட்டையோ கருத்துக்கு எடுக்கலாம். இவை மேற் சொன்னவாறு வரையறுக்கப்பட்டுத் தனித்தனியாக விளக்கப்படலாம் ஆயினும், மனிதச் சூழல் மண்டலங்கள் தனித்தனியாக இயங்குவதில்லை. அவை எல்லாச் சூழல் மண்டலங்களையும் இணைக்கும், மனித மற்றும் சூழலியற் தொடர்புகளைக் கொண்டதொரு சிக்கலான வலையமைப்பின் வழியாக ஊடுதொடர்புகளைக் கொண்டிருக்கின்றன.
சூழலியல், மானிடவியல், சமூகவியல், தத்துவம், அரசறிவியல், உளவியல் போன்ற துறைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள மனிதச் சூழல் மண்டலம் என்னும் கருத்துரு, மனிதர்கள் ஊடுதொடர்புகளைக் கொண்டுள்ள சிக்கலான தொடர்பு முறைமைகளைப் புரிந்துகொள்ள முயல்கிறது. மனிதச் சூழல் மண்டலம் தொடர்பான பெரும்பாலான பகுப்பாய்வுகள் உயிரியல், சமூக-பண்பாடு, சூழல் என்பவை சார்ந்த குறிப்பிட்ட சூழல்களின்மீதே கவனம் செலுத்துகின்றன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads