மயிலம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு ஊர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயிலம் (ஆங்கிலம்:Mailam) இந்திய நாட்டில், தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, நகரமாகும். இது மயிலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மயிலம் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாக தலைமையிடம் மற்றும் மயிலம் ஊராட்சி அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2]
மயிலம் 30 செப்டம்பர், 1993-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலிருந்து பிரிந்த விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலம் மாவட்டத்தலைநகரான விழுப்புரத்திலிருந்து 28 கி.மீ. தூரத்திலும், திண்டிவனத்திலிருந்து 12 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 33 கி.மீ. தூரத்திலும், நெல்லிக்குப்பத்திலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள புகைவண்டி நிலையம் மயிலம் புகைவண்டி நிலையம் ஆகும்.
Remove ads
வீடூர் அணை
மயிலம் ஊராட்சிக்கும், வீடூர் ஊராட்சிக்கும் இடையே உள்ள வீடூர் அணை சங்கராபரணி மற்றும் பெரியாறு ஒன்று சேருமிடத்தில் உள்ளது.[3]
கோயில்
இங்கு புகழ்பெற்ற முருகன் கோயில், மலை மீது அமைந்துள்ளது.
11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1,000 ஆண்டு பழமையான ஸ்ரீ மயிலியம்மன் கோவிலும் உள்ளது. இது மணல் ஏரி அருகில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads