மயோட்டே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மயோட்டே அல்லது அதிகாரபட்சமாக மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு (பிரெஞ்சு: Collectivité départementale de Mayotte) பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு கிரண்டே-டெரே (அல்லது மவோரே) என்ற முக்கிய தீவையும் பெடீடே-டெரே (அல்லது பமன்சி, Pamanzi) என்ற சிறிய தீவையும் இவ்விரண்டுத் தீவுகளை அண்டிய பல சிறிய தீவெச்சங்களையும் கொண்டுள்ளது.
மொசாம்பிக் கால்வாயின் வட எல்லையில் பெருங்கடலில் வட மடகசுகாருக்கும் வட மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பு புவியியல் சார்பாக நோக்குகையில் கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ளது எனினும் 1970களிலிருந்து அரசியல் சார்பாக தனி அமைப்பாக நிழவிவருகின்றது. இக்கூட்டமைப்பு உள்ளூர் பெயரான மவோரே எனவும் அழைக்கப்படுவதுண்டு முக்கியமாக கொமொரொசு ஒன்றியத்துடன் மயோட்டையை இணைக்க கோறுகின்றவர்கள் இவ்வாறு அழைப்பது கூடுதலாக காணப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads