மரகதம் சந்திரசேகர்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

மரகதம் சந்திரசேகர்
Remove ads

மரகதம் சந்திரசேகர் (Maragatham Chandrasekar) (நவம்பர் 11 1917 - அக்டோபர் 27 2001)[1][2][3] இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய அரசியல்வாதி, மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சரும் ஆவார்.[4]

விரைவான உண்மைகள் மரகதம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை ...
Remove ads

வாழ்க்கை

மரகதம் சந்திரசேகர் 11 நவம்பர் 1917-இல் வித்வான் களத்தூர் முனிசாமிக்கு மரகதம் முனிசாமியாகப் மகளாகப் பிறந்தார். இவர் இந்தியாவில் தனது இளநிலை அறிவியல் பட்டத்தினைப் பெற்றார். இலண்டனில் இதழியல், அறிவியல் மற்றும் உணவுமுறை படிப்புகளில் பட்டயப்படிப்பினை முடித்தார். இலண்டனில் சிறப்பு நிறுவ்னத்தில், நிர்வாக மேலான்மை என்ற பாடத்தையும் இவர் பயின்றார். மரகதம் ஆர். சந்திரசேகரை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகனும் (இலலித் சந்திரசேகர்) ஒரு மகளும், லதா பிரியகுமார் உள்ளனர். லதா பிரியக்குமார் தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[5][6]

Remove ads

அரசியல்

மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து 1951ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 முதல் 1957 வரை திருவள்ளூர் மக்களவை உறுப்பினராகவும், 1970 முதல் 1984 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1951 முதல் 1957 வரை சுகாதாரம், 1962 முதல் 1964 வரை உள்துறை மற்றும் 1964 முதல் 1967 வரை சமூக நலத்துறை துணை அமைச்சராகவும் பணியாற்றினார். 1972ல், அகில இந்திய காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராக மரகதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8][9][10]

Remove ads

ராஜீவ் காந்தியின் படுகொலை

திருபெரும்புதூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மரகதம், இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது சந்திரசேகர் நடைபெற்ற பேரணியில் மரகதம் சந்திரசேகருடன் கலந்துகொண்டார்.[11]

இறப்பு

மரகதம் சந்திரசேகர் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் 26 அக்டோபர் 2001 அன்று இறந்தார்.[12]

மேற்கோள்கள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads