மரக்கதிர்க்குருவி

From Wikipedia, the free encyclopedia

மரக்கதிர்க்குருவி
Remove ads

மரக்கதிர்க்குருவி (Booted Warbler, Hippolasis caligata)[1] மரங்களிடையே பாய்ந்து திரிந்து இரை தேடும் ஒரு கதிர்க்குருவி ஆகும். குருவி வரிசையை சார்ந்தது.

விரைவான உண்மைகள் மரக்கதிர்க்குருவி, காப்பு நிலை ...
Remove ads

உடலமைப்பு

12 செ.மீ. - உடலின் மேற்பகுதி வெளிர் பழுப்பு நிறமாக இருக்க மார்பும் வயிற்றின் கீழ்ப்பகுதியும் வெளிர்மஞ்சள் நிறமாக இருக்கும். பானை போன்ற வயிறும் வாலின் நுனி சதுரமாகவும் தெளிவான வெளிர்நிற புருவக் கோடும் கொண்டது[2]. பிளித் நாணல் கதிர்குருவி, சைக்சு கதிர்குருவி ஆகிய இரண்டு கதிர்குருவிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது கடினம். சிறிய, கருநுனியுடைய அலகு, வாலின் அடிப்பகுதியில் உள்ள சிறகுத்தொகுதி சிறியதாகவும் இருப்பது இதை பிளித் நாணல் கதிர்குருவியிலிருந்து வேறுபடுத்த உதவும் (பிளித் நாணல் கதிர்குருவியின் அலகு சற்று நீளமாக இருக்கும்; வால் அடியிலுள்ள சிறகுத்தொகுதி நீண்டு காணப்படும்)

Remove ads

காணப்படும் பகுதிகள்

Thumb
Booted warbler taken in Udumalpet, Tamil Nadu.

செப்டம்பரில் வடக்கேயிருந்து வலசை வரும் இது. ஏப்ரலில் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பும். முன் இரண்டையும் போல நீர் வளம் மிக்க புதர்கள் மற்றும் வயல்வெளிகளைச் சார்ந்து திரியாது வறள் நிலங்களில் நிற்கும் கருவேல், வெள்வேல் போன்ற முள் மரங்களிடையே பாய்ந்து திரிந்து இரை தேடும் பழக்கத்தைக் கொண்டது.

உணவு

மரங்களிடையே பாய்ந்து திரிந்து இரை தேடும் பழக்கத்தைக் கொண்டது. மரங்களில் தங்கி வாழும் புழுப்பூச்சிகளுமே இதன் முக்கிய உணவு. இச்சூழல் வேறுபாட்டால் இதனை வேறுபடுத்தி அறியலாம். மரக்கிளைகளை விட்டு வெளிவந்து சிமிழ்களில் தாவியபடி பூச்சிகளைப் பிடிக்கும் வழக்கமும் இதற்கு உண்டு.

இனப்பெருக்கம்

தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் செய்வதில்லை.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads