மரியா மாண்ட்டிசோரி

From Wikipedia, the free encyclopedia

மரியா மாண்ட்டிசோரி
Remove ads

மரியா மாண்ட்டிசோரி (ஆகஸ்ட் 31, 1870மே 6, 1952) இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளை பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி ஜனவரி 6, 1907 இல் ரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.

விரைவான உண்மைகள் மரியா மாண்ட்டிசோரி, பிறப்பு ...
Thumb
மரியா மாண்ட்டிசோரி

இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டை விட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்த துவங்கினர். நெதர்லாந்தில் மிக புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.

Remove ads

வாழ்க்கை

பிறப்பு மற்றும் குடும்பம்

மாண்டிசோரி 1870 ஆம் ஆண்டு ஆகத்து 31 ஆம் நாள் இத்தாலியில் சிரவால்லே என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் அலெக்சான்ட்ரோ மாண்டிசோரி மாநில அரசால் நடத்தப்படும் புகையிலை நிறுவனத்தில் நிதி அமைச்சக அலுவலராக இருந்தார். இவரது தாய் ரெனிடில் இசுடாப்பானி நன்கு கல்வி கற்றவர் ஆவார். இவர் ஆண்டோனிய இசுடாப்பானி என்ற இத்தாலிய மண்ணியலாளர் மற்றும் மருமகள் ஆவார்.[1][2] அவருக்கு எந்த ஒரு குறிப்பிட்ட வழிகாட்டியும் இல்லை என்றாலும், அருகிலிருந்தே அவரை ஊக்கப்படுத்திய தன் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் தன் தந்தையுடன் அன்பான உறவைக் கொண்டிருந்தாள், இருப்பினும் அவர் கல்வியைத் தொடர அவள் விருப்பத்தை ஏற்கவில்லை.[3]

Remove ads

மாண்டிசோரி முறைக் கல்வி

இந்த கல்வி முறை குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தனது தேவைகளை தானே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள்.

குழந்தைகள் புதியவற்றை தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் (ஆசிரியர்களின்) பணி. இவரது மிகச்சிறந்த புத்தகங்கள் "The Absorbent Mind", "The Discovery of the Child".

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads