மலாக்கா மாநகராட்சி

மலாக்கா மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia

மலாக்கா மாநகராட்சி
Remove ads

மலாக்கா மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Melaka Bersejarah; ஆங்கிலம்: Malacca City Council); (சுருக்கம்: MBMB) என்பது மலேசியா, மலாக்கா, மாநிலத்தில் மலாக்கா மாநகரத்தையும் மத்திய மலாக்கா மாவட்டத்தையும் (Melaka Tengah District) நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் மலாக்கா மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் மலாக்கா மாநகராட்சிHistorical Malacca City CouncilMajlis Bandaraya Melaka, வகை ...

மலாக்கா மாநகராட்சியின் பிரதான தலைமையகம் ஆயர் குரோவில் உள்ள கிரகா மக்மூர் (Graha Makmur) வளாகத்தில்; ஆங் துவா ஜெயா நகராட்சி (Hang Tuah Jaya Municipal Council) கட்டடத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.

Remove ads

வரலாறு

Thumb
முன்னாள் மலாக்கா ஊராட்சி மன்றத்தின் கட்டடம். தற்போது மக்கள் அருங்காட்சியகமாக உள்ளது.

மலாக்கா நகராட்சி 1824-ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் (British East India Company) நிறுவப்பட்டது. அப்போது அதற்குப் பெயர் மலாக்கா கோட்டை ஊராட்சி (Municipality of the Town and Fort of Malacca). 11 சதுர கி.மீ. (4.2 சதுர மைல்) அகலம் கொண்டது.

அப்போது மலாக்கா கோட்டைக்கு அருகில் இருந்த வீட்டு மனைகளில் சுங்க வரி வசூலிப்பதற்கான முதன்மை நோக்கத்தில் மலாக்கா கோட்டை ஊராட்சி நிறுவப்பட்டது.

மலாக்கா நகராட்சி ஆணையம்

1977 சனவரி 1-ஆம் தேதி, மலாக்கா நகராட்சி ஆணையமும், மத்திய மலாக்கா மாவட்ட கிராமப்புற மன்றமும் (Melaka Tengah Rural District Council) ஒன்றிணைக்கப்பட்டன. மத்திய மலாக்கா நகராட்சி (Melaka Tengah Municipal Council) எனும் அமைப்பு உருவாக்கப் பட்டது. அதன் நிர்வாகப் பரப்பளவு 297.19 சதுர கி.மீ. (114.75 சதுர மைல்).

1987-இல் மலாக்கா நகராட்சி (Malacca Municipal Council) என பெயர் மாற்றம் கண்டது. 1989 ஏப்ரல் 15-ஆம் தேதி, மலாக்கா நகரத்திற்கு வரலாற்று நகரம் எனும் சிறப்புப் பெயரை மத்திய அரசு வழங்கியது. அதன் விளைவாக மலாக்கா நகராட்சியும்; வரலாற்று மலாக்கா மாநகராட்சி (ஆங்கிலம்: Historical City of Malacca Municipal Council; மலாய்: Majlis Perbandaran Melaka Bandaraya Bersejarah) (MPMBB) எனும் புதிய பெயரையும் பெற்றது.[1]

மலாக்கா நகரத்திற்கு மாநகரத் தகுதி

மலாக்கா நகராட்சியின் தலைமையகம் முதலில் மக்கள் அருங்காட்சியகம் (People's Museum), காற்றாடி அருங்காட்சியகம் (Kite Museum) மற்றும் அழகு அருங்காட்சியகம் (Beauty Museum) எனும் அருங்காட்சியங்களைக் கொண்ட கட்டடத்தில் அமைந்து இருந்தது. இப்போது அதன் தலைமையகம் ஆயர் குரோவில் உள்ள தற்போதைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.[2]

2003 ஏப்ரல் 15-ஆம் தேதி மலாக்கா நகரத்திற்கு மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பின்னர் மலாக்கா நகராட்சி தற்போதைய வரலாற்று மலாக்கா மாநகராட்சி எனும் பெயரைப் பெற்றுள்ளது.[3]

Remove ads

செயல்பாடுகள்

மலாக்கா மாநகராட்சியின் செயல்பாடுகள்:

மலாக்கா நகராட்சி முதல்வர்கள்

மேலதிகத் தகவல்கள் #, முதல்வர் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads