மலாக்கா மாநில ஆட்சிக்குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலாக்கா மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Malacca State Executive Council; மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Melaka) என்பது மலேசியா மலாக்கா மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். மலாக்கா யாங் டி பெர்துவா (Yang di-Pertua Negeri of Malacca) அவர்களால் நியமிக்கப்பட்ட மலாக்கா முதலமைச்சர் (Ketua Menteri Melaka) இந்த ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். [1][2]
மலாக்கா முதலமைச்சர், மலாக்கா மாநில சட்டமன்றத்தில் (Malacca State Legislative Assembly) அதிகப் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
Remove ads
பொது
இந்த ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மலாக்கா முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டு மலாக்கா ஆளுநரால் நியமிக்கப் படுகிறார்கள். மலேசியாவின் மாநில ஆட்சிக் குழுக்களுக்கு தனித்தனியான அமைச்சுகள் இல்லை. மாறாக குழுக்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு குழுவும் அந்தக் குழு சார்ந்த மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர் ஒரு குழுவின் தலைவராகச் செயல்படுவார்.
Remove ads
உறுப்பினர்களின் பட்டியல்
அப்துல் ரவுப் யூசோ ஆட்சிக்குழு
(2023 தொடக்கம்)
பாரிசான் (10) | பாக்காத்தான் (1) |
| |
31 மார்ச் 2023 தொடக்கம் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்:[3]
துணை உறுப்பினர்கள்
பாரிசான் (8) | பாக்காத்தான் (2) |
|
|
6 ஏப்ரல் 2023 தொடக்கம் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள்:
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads