பெரிக்காத்தான் நேசனல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரிக்காத்தான் நேசனல் (மலாய்:Perikatan Nasional (PN); ஆங்கிலம்: National Alliance; சீன மொழி: 国民联盟 / 国盟); என்பது மலேசியாவில் 2020 மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணிக் கட்சியாகும். 2020 மலேசிய அரசியல் நெருக்கடியின் தொடக்கத்தில் பாக்காத்தான் அரப்பான் (PH) அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்துடன் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி உருவாக்கப்பட்டது.
மலேசியாவின் 16-ஆவது யாங் டி பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா, முறைசாரா அரசியல் கூட்டணியாக இருந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் நடைமுறைத் தலைவர் முகிதீன் யாசினை 2020-ஆம் ஆண்டில், மலேசியாவின் 8-ஆவது பிரதமராக நியமித்தார்.
பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில்; பாரிசான் நேசனல் (BN), சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS), சபா மக்கள் கூட்டணி (GRS) மற்றும் பிற அரசியல் கட்சிகளும் மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை உறுப்புக் கட்சிகளாக இருந்தன.
Remove ads
பொது
பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி, மார்ச் 2020 முதல் ஆகஸ்டு 2021 வரை, அதன் தலைவர் முகிதீன் யாசின் தலைமையின் கீழ் மலேசிய அரசாங்கத்தை வழிநடத்தின. இருப்பினும் ஒரு கட்டத்தில் பாரிசான் நேசனல் தன் ஆதரவை மீட்டுக் கொண்டது. அதனால் மலேசிய மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்த முகிதீன் யாசின் தம் பிரதமர் பதவியைத் துறப்பு செய்தார்.
முகிதீன் யாசின் பதவி துறப்புக்குப் பின்னர் அம்னோவின் துணைத் தலைவர் இசுமாயில் சப்ரி யாகோப் ஆகஸ்டு 2021 முதல் நவம்பர் 2022 வரை கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். மலேசியப் பொதுத் தேர்தல், 2022-க்குப் பின்னர் பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிம் ஏற்றுக் கொண்டார். இதற்குப் பின்னர் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி, மலேசியாவின் முன்னோடி எதிர்க்கட்சியாக மாறியது.[5][6][7][8][9]
பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அமைப்பு
- மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (பி.பி.பி.எம்) - (Malaysian United Indigenous Party (PPBM)
- மலேசிய இசுலாமிய கட்சி - Malaysian Islamic Party (PAS)
- மாநில சீர்திருத்தக் கட்சி - Homeland Solidarity Party (STAR Sabah)
- சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (Sabah Progressive Party (SAPP)
- மலேசிய மக்கள் இயக்கக் கட்சி Parti Gerakan Rakyat Malaysia (Gerakan)
Remove ads
மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022
2020-ஆம் ஆண்டில் இருந்து 2022-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் ஏற்பட்ட ஓர் அரசியல் நெருக்கடியை மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022 என குறிப்பிடுகிறார்கள்.
மலேசியாவின் 14-ஆவது மக்களவை உறுப்பினர்கள் (Members of the Dewan Rakyat, 14th Malaysian Parliament) தங்களின் கட்சி ஆதரவுகளை மாற்றியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. இதுவே மலேசிய நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணியின் பெரும்பான்மையை இழக்க வழிவகுத்தது; அடுத்தடுத்து இரண்டு கூட்டணி அரசாங்கங்கள் சரிவதற்கும் வழி அமைத்தது.
இந்த 18 மாத நெருக்கடியில், மலேசியப் பிரதமர்கள் இருவர் பதவி துறப்புகள் செய்தனர். அத்துடன் 2022-ஆம் ஆண்டு உடனடிப் பொதுத் தேர்தலும் (Snap General Election) நடைபெற்றது. இறுதியில் மலேசியாவில் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (National Unity Government) உருவாக்குவதற்கும் இந்த நெருக்கடி வழிவகுத்துக் கொடுத்தது.
பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம்
முகிதீன் யாசின் ஆட்சி 17 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு ஆகத்து 2021-இல் முகிதீன் யாசின் மற்றும் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) பதவி துறப்பு செய்ததன் மூலம் நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்தது. பெரும்பான்மை ஆதரவை இழந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம், அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் பொதுவான நல்ல ஒரு முடிவைக் காண முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், பிரதமர் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) 16 ஆகத்து 2021-இல் பதவி துறப்பு செய்தது.[10]
சில நாட்களுக்குப் பிறகு, முகிதீன் யாசினுக்கு பதிலாக இசுமாயில் சப்ரி யாகோப் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் சில மாநிலத் தேர்தல்களும்; 2022-ஆம் ஆண்டு உடனடிப் பொதுத் தேர்தலும் முன்கூட்டியே நடைபெற்றன. இதன் விளைவாக ஒரு தொங்கு நாடாளுமன்றம் உருவானது. ஓர் ஒற்றுமை அரசாங்கம் (National Unity Government) உருவாகுவதற்கும் அந்த அரசியல் நெருக்கடி வழிவகுத்துக் கொடுத்தது. இறுதியில் அன்வர் இப்ராகீம் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
Remove ads
உறுப்புக் கட்சிகள்
மேலும் காண்க
மேலும் படிக்க
- James Chin (2020) Malaysia: the 2020 putsch for Malay Islam supremacy . The Round Table 109(3):288-297. DOI: 10.1080/00358533.2020.1760495
- James Chin (2020) The new ruling coalition Malaysia takes a turn to the right, and many of its people are worried, The Conversation, March 2020
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads