மலேசிய கடல்சார் காவல்துறை
மலேசியாவின் கடல்சார் பகுதிகளில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய கடல்சார் காவல்துறை (மலாய்: Agensi Penguatkuasaan Maritim Malaysia (APMM); ஆங்கிலம்: Malaysia Coast Guard; Malaysian Maritime Enforcement Agency) (MMEA); சீனம்: 马来西亚海事执法局) என்பது மலேசியாவின் கடல்சார் பகுதிகளில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கிய அரசு அமைப்பு; மலேசிய உள்துறை அமைச்சின் கீழ் இயங்குகிறது. இதன் தலைமையகம் புத்ராஜெயா கூட்டரசு நிர்வாக மையத்தில் உள்ளது. [3]
இந்தத் துறை, மலேசிய கடல்சார் மண்டலம் மற்றும் கடல் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது; நாட்டின் அவசரகாலநிலை, குறிப்பிடத்தக்க நெருக்கடிகள் அல்லது போர்க்காலம்; ஆகியவற்றின் போது மலேசிய ஆயுதப்படைகளின் கீழ் ஒருங்கிணைக்கப்படலாம்.[4]
இந்தத் துறை, ஐக்கிய அமெரிக்காவின் கடலோர காவல்படை (United States Coast Guard)[5] மற்றும் சப்பான் கடலோர காவல்படை (Japan Coast Guard) ஆகியவற்றுடன் நெருங்கிய உறவைப் பேணுகிறது.[6][7]
Remove ads
வரலாறு

மலேசிய கடல்சார் காவல் துறையின் வரலாறு, 21 ஏப்ரல் 1999 அன்று, மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றத்தில் (National Security Council of Malaysia), மலேசியப் பிரதமர் துறையால் நடத்தப்பட்ட ஒரு சந்திப்பு நிகழ்வின் மூலமாகத் தொடங்குகிறது. அன்றைய தினம், மலேசிய கடலோர காவல்படையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் எனும் ஆய்வு அறிக்கை அந்த நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டது.[8]
16 ஏப்ரல் 2003-இல் அறிக்கையின் முடிவுகளை மலேசிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. டத்தோ அபு தாலிப் அஜி அருன் என்பவரின் தலைமையில், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறையின் உருவாக்கத்தை ஒழுங்கமைக்கும் குழு உருவாக்கப்பட்டது.
மலேசிய கடல்சார் அமலாக்கச் சட்டம்
மே 2004-இல், மலேசிய நாடாளுமன்றத்தில் மலேசிய கடல்சார் அமலாக்கச் சட்டம் 2004 (சட்டம் 633) (Malaysian Maritime Enforcement Agency Act 2004) (Act 633) இயற்றப்பட்டது. அதன் வழி, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை முறையாக நிறுவப்பட்டது.
அந்தச் சட்டம் 25 சூன் 2004 அன்று; யாங் டி பெர்துவான் அகோங் அவர்களிடமிருந்து அரச ஒப்புதலைப் பெற்றது. அதே ஆண்டு சூலை 1 அன்று, மலேசிய அரசிதழில் வெளியிடப்பட்டது. 15 பிப்ரவரி 2005 அன்று, சட்டம் அமலுக்கு வந்தது.
மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை
10 அக்டோபர் 2005 அன்று, அப்போதைய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் அவர்களால், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை பொதுமக்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
30 நவம்பர் 2005 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, தன் கப்பல்களின் வழி ரோந்துப் பணிகளைத் தொடங்கியது.[8] 21 மார்ச் 2006 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, சிறப்புரிமை பெற்ற மலேசிய அரசாங்க நிறுவனங்களின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டது.
புதிய கப்பல்கள்
28 ஏப்ரல் 2017 அன்று, மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை, பன்னாட்டு அடையாளத்திற்காக மலேசிய கடல்சார் காவல்துறை என முறைப்படி மறுபெயரிடப்பட்டது.[3] புதிய கப்பல்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. இருப்பினும், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் எனும் பெயர் பணி நோக்கங்களுக்காகத் தக்கவைக்கப்பட்டது.[3]
மே 2018 இல், மலேசியாவில் புதிய அரசாங்கத்தின் கீழ், மலேசிய கடல்சார் அமலாக்கத் துறை; மலேசிய உள்துறை அமைச்சுடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.[9] நவம்பர் 2018 இல், மலேசியாவின் வரவு செலவுத் திட்டம் 2019-இன் கீழ், அந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.[10]
Remove ads
மலேசிய கடல்சார் மண்டலம்


உள்நாட்டு நீர்ப்பகுதி மற்றும் வட்டாரக் கடல் பகுதி
- வட்டாரக் கடல் பகுதி: 12 கடல் மைல்கள் (22 கி.மீ.)
- (Territorial Sea: 12 nautical miles (22 km) from baseline)
- இறையாண்மை: மலேசிய நிலப்பரப்பின் பகுதி
- (Sovereignty: part of the territory of Malaysia)
- அனைத்து கப்பல்களுக்கும் பொதுப் பயன்பாட்டிற்கு உட்பட்டது
- (Subject to the right of innocent passage for all vessels)
தொடர்ச்சி மண்டலம்
- கடற்கரையிலிருந்து 24 கடல் மைல்கள் (44 கி.மீ.)
- (24 nautical miles (44 km) from coast)
- சுங்கம், நிதி, குடிவரவு அல்லது சுகாதாரச் சட்டங்களை மீறுவதைத் தடுக்க அல்லது தண்டிக்க வ்ரையறுக்கப்பட்ட அதிகார வரம்பு
- (Jurisdiction to prevent or punish infringement of customs, fiscal, immigration or sanitary laws)
சிறப்பு பொருளாதார மண்டலம்
- கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் (370 கி.மீ.)
- (200 nautical miles (370 km) from coast)
- கடற்பரப்பு மற்றும் நீர் வளங்களை நிர்வகிப்பதற்கான இறையாண்மை உரிமைகள்.
- (Sovereign rights over the management of the resources of the seabed and water column)
- அதிகார வரம்பு: - செயற்கைத் தீவுகளின் கட்டுமானம்- கடல் அறிவியல் ஆய்வு - கடல் சூழலைப் பாதுகாத்தல்
- (Jurisdiction in respect of: - construction of artificial islands- marine scientific research - protection of the marine environment)
Remove ads
தரவரிசை அமைப்பு
உயர் அதிகாரிகள்
அதிகாரிகள் / வீரர்கள்
மேலும் காண்க
- மலேசிய பாதுகாப்பு படைகள்
- அரச மலேசிய காவல் துறை
- ஜொகூர் அரச இராணுவப் படை
- மலேசிய கூட்டுப் படைகளுக்கான கட்டளையகம்
மேற்கோள்கள்
இணையத்தளங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads