மலேசிய நிதி அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய நிதி அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Finance of Malaysia; மலாய்: Menteri Kewangan Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.
மலேசிய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான நிதியமைச்சர், அரசாங்கத்தின் நிதிக் கொள்கையை நிர்ணயிப்பதற்கும்; அரசாங்கத்தின் தேசிய வரவு செலவுத் திட்டத்தை நிர்வகிப்பதற்கும் பொறுப்பானவர் ஆவார். 3 டிசம்பர் 2022 முதல் பிரதமர் அன்வார் இப்ராகிம் நிதி அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். அவர் இதற்கு முன் 1991 முதல் 1998 வரை மலேசிய நிதி அமைச்சர் பதவியை வகித்துள்ளார்.
Remove ads
பொது
மலேசியாவின் மிக முக்கியமான அமைச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிதி அமைச்சின் தலைவர் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், மலேசிய நடுவண் அரசாங்கத்தின் ஆண்டு வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.
மலேசிய நிதி அமைச்சு
அரசாங்கத்தின் செலவுகள், மற்றும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கச் செய்தல் (Government Revenue Raising) போன்ற மிக முக்கியமான நிதி விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்புகளை மலேசிய நிதி அமைச்சு மேற்கொள்கிறது.[1]
நிதி அமைச்சர் பதவி மிகவும் மூத்த அரசு பதவியாகக் கருதப்படுகிறது. வரலாற்று அடிப்படையில், முன்பு நிதி அமைச்சர் பதவியை வகித்தவர்களில் பலர் மலேசியப் பிரதமர் அல்லது மலேசிய துணைப் பிரதமராகவும் பணியாற்றி உள்ளார்கள்.
நிதி அமைச்சராகப் பணியாற்றுவது பிரதமராகப் பொறுப்பு ஏற்பதற்கான முக்கியத் தகுதியாகக் கருதப்பட்டாலும் அது அவசியம் அல்ல என அறியப்படுகிறது. நிதி அமைச்சர் பதவியை வகிக்காமலேயே ஒருவர் மலேசிய நாட்டின் பிரதமராகலாம். தற்போது வரையில், ஐந்து மலேசிய நிதி அமைச்சர்கள் மலேசியப் பிரதமர்களாகப் பதவி வகித்து உள்ளனர்.
Remove ads
அமைச்சர்களின் பட்டியல்
நிதி அமைச்சர்கள்
நிதி அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் சுயேச்சை
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads