மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Islam Antarabangsa Malaysia; ஆங்கிலம்:International Islamic University Malaysia என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக், புறநகரில் உள்ள ஓர் இசுலாமியப் பல்கலைக்கழகம் ஆகும். ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகமான இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மலேசியா முழுவதும் மேலும் ஆறு வளாகங்கள் உள்ளன:
பகாங், காம்பாங் புறநகர்ப் பகுதியில் இரண்டு மருத்துவ மைய வளாகங்கள் மற்றும் அறக்கட்டளை ஆய்வுகளுக்கான ஒரு மையம்; கோலாலம்பூரில் இரண்டு நகர வளாகங்கள் மற்றும் ஜொகூர் பாகோவில் ஒரு மொழி வளாகம் மற்றும் சுற்றுலா வளாகம் ஆகியவை உள்ளன.
Remove ads
பொது
இந்தப் பல்கலைக்கழகத்திற்கு எட்டு வெளிநாட்டு அரசாங்கங்கள்; மற்றும் இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) ஆகியவை நிதியுதவி செய்கின்றன. எனினும் இந்தப் பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் இசுலாமாபாத் பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (International Islamic University Islamabad); மற்றும் வங்காளதேசத்தின் சிட்டகாங் பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம் (International Islamic University Chittagong) ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது ஆகும்.
இசுலாமிய விழுமியங்கள்
மலேசிய பன்னாட்டு இசுலாமிய பல்கலைக்கழகம், இசுலாமிய கொள்கைகளின் அடிப்படையில் 23 மே 1983-இல் நிறுவப்பட்டது. இதன் அனைத்து துறைகளிலும் இசுலாமிய விழுமியங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பல்கலைக்கழகம் தனது 14 துறைகளின் வழியாக இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.[2]
1987-ஆம் ஆண்டு முதல், இந்தப் பல்கலைக்கழகம், உலகம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 70,000-க்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
Remove ads
காட்சியகம்
- பல்கலைக்கழக வளாகங்கள்
- சுல்தான் அகமது சா பள்ளிவாசல், கோம்பாக் வளாகம் (வெளிப்புறக் காட்சி)
- சுல்தான் அகமது சா பள்ளிவாசல், கோம்பாக் வளாகம் (உட்புறக் காட்சி)
- கலாசார மையம் (இடதுபுறம்); மற்றும் அசுமான் அசிம் வளாகம் (வலதுபுறம்)
- கோம்பாக் வளாக நூலகம்
- கோம்பாக் வளாகத்தின் 17 கல்லூரிகளில் மகல்லா அல்-பாரூக் குடியிருப்பு வளாகம்
- சையிதினா அம்சா திறந்த வெளியிடம்
- கால்பந்து திடல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads