மற்போர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மற்போர் அல்லது மல்யுத்தம் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. தமிழில், 'மல்' என்பதற்கு வலிமை, மற்றொழில் எனப் பொருள் வழங்கப்படுகின்றன. இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது."[1] மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.


Remove ads
தமிழர் மரபில் மற்போர்
மல்லாடல் பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர்[2] விளையாட்டு இந்தியாவில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.
கோதா
மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார்ப்படுத்தினார்கள் என்றால், செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய், தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.[3]
தமிழ்த் திரைப்படங்களில் மற்போர்
காஞ்சித் தலைவன், பருத்திவீரன், மதராசபட்டினம் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads