மதராசபட்டினம் (திரைப்படம்)
ஏ. எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதராசபட்டினம் என்பது 2010இல் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை விஜய் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஆர்யா, ஏமி ஜாக்சன், நாசர், கொச்சின் ஹனீபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2010 சூலை 9 வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.[2][3]
Remove ads
கதைச் சுருக்கம்
கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் மதராசப்பட்டினத்தில் வசிக்கும் சலவை தொழிலாளி ஆர்யா. அவரது வீரதீர செயல்களையும், நற்குணங்களையும் யதேச்சையாக கவனிக்கின்ற ஆங்கிலேய கவர்னரின் மகளுக்கு ஆர்யா மீது காதல். அந்த காதல் தடைகளைத் தாண்டி வெற்றியடைந்ததா தோல்வியடைந்ததா என்பதை கதாநாயகி நினைவலைகளில் இருந்து கூறுகிறது இப்படம்.
இந்தியா சுதந்திரம் பெறும் சமயத்தில் சென்னை ஆளுநராக இருந்தவரின் புதல்வி ஏமி ஜாக்சன். அவர் சென்னையில் தனது மொழிபெயர்ப்பாளருடன் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஆர்யா ஒரு கழுதைக்குட்டியைக் காப்பாற்றுவதைக் காண்கிறார். இதைக் கண்டு ஆர்யா மீது காதல் கொள்கிறார். தொடர்ந்து வரும் சந்திப்புகளில் ஆர்யாவும் ஏமி மீது காதல் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஆர்யா, ஏமிக்கு ஒரு தாலியைக் கொடுக்கிறார். ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்பு இருவரும் பிரிக்கப்படுகிறார்கள். 60 ஆண்டுகளுக்குப் பின் ஆர்யாவிடம் இருந்து பெற்ற தாலியைத் திருப்பிக் கொடுக்க இந்தியா வரும் ஏமி, ஆர்யா இத்தனை ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தனது பெயரில் பல நற்பணிகள் செய்து வருகிறார் என்றும் அறிகிறார். இதைத் தொடர்ந்து ஏமியும் ஆர்யாவின் சமாதியின் அருகே உயிர் துறக்கிறார்.
Remove ads
நடிகர்கள்
- ஆர்யா இளம்பரிதி (அல்லது) பரிதி என
- ஏமி சாக்சன் ஆமி வில்கின்சன்
- நாசர் - அய்யாகண்ணு
- கொச்சி ஹனீஃபா - நம்பி
- லிசா லாசரஸ் கேத்தரின்
- அலக்சு ஓ'நெல் -ராபர்ட் எல்லிஸ்
- எம். ஆர். கிஷோர் குமார் - ரெங்கன்
- கபீராக உமர் லத்தீப்
- கர்ணனாக என்.எல். சீனிவாசன்
- சதீஸ் - பச்சை
- எம். எசு. பாசுகர் - வேங்கப்பன்
- பாலா சிங் துரைசாமி
- பாலாஜி வேணுகோபால் வீரசேகர முரளி
- லோலு சபா ஜீவா முரளியின் உதவியாளர்
- இளங்கோ குமரவேல் - டாக்ஸி ஓட்டுனர்
- லீமா பாபு - செல்வி
- டி. எம். கார்த்திக் - பெயிண்டர் என
- ஜார்ஜ் மரியன் ஆங்கில ஆசிரியராக
- அப்புக்குட்டி - சோம்பேரி மனிதன்
- அஜயன்பாலா - சென்னை மத்திய தொடருந்து நிலையம் - நிலைய தலைவர்
- சம்பத் ராம் - காவல் அதிகாரி
- நீலு நஸ்ரீன்
- ஆளுநராக ஜாக் ஜேம்ஸ்
- ஆளுநரின் மனைவியாக லவ்டே ஸ்மித்
- ரெவரெண்ட் எம். ஸ்மித் ஆக மைக் பாரிஷ்
- பிரித்தானிய அதிகாரியாக மாத்தியூ பெல்லன்
Remove ads
இசை
மதராசபட்டினம் திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்தார். இந்த பாடல்களை 4 ஏப்ரல் 2010 அன்று கமல்ஹாசன் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் வெளியிட்டனர். பாடல்களை நா. முத்துக்குமார் எழுதினார்.
தமிழ் பாடல்கள்
தெலுங்கு பாடல்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads